திமுக தொண்டர் செய்தாது சரி தான்..!

*முக ஸ்டாலின்*

தர்மபுரி மாவட்டத்தில் நாம்தமிழர் நடத்திய பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆளும் கட்சி திமுக வையும் திமுகவின் தலைவர் ஸ்டாலினையும் மரியாதைக் குறைவாகப் பேசியதால் அந்தப்பகுதியை திமுகவின் பொறுப்பாளர் செங்கண்ணன் பொறுமை இழந்து மேடையில் நாம் தமிழர் கட்சி காரர்களை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இச்சம்பவம் தர்மபுரியில் செவ்வாய் கிழமை அன்று நிகழ்ந்தது. இச்சம்பவத்தைப் பற்றி பல நாம் தமிழர் கட்சிக்கு திமுகவுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

பெரும்பாலும் இச்சம்பவம் திமுகவிற்கு எதிராக அமைந்துள்ளது. ஏனென்றால் கருத்து சுதந்திரமான இந்த நாட்டில் தனிநபர் கருத்துக்களை கூறுவது குற்றமில்லாத ஒன்றாகும். அதனால் நாம் தமிழர் கட்சியினர் பேசியது கருத்து சுதந்திரமானது என்று பலர் கூறி வருகின்றனர்.

ஆனால் அங்கு என்ன நடந்தது என்று பார்த்தாள். அந்தப் பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் திமுகவையும் திமுக தலைவர் ஸ்டாலினையும் மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளனர்.

இதில் குறிப்பாக ஸ்டாலினை “தன்அப்பன் பெயரை பேப்பர் பார்த்து படிக்கும் ஒரு தலைவனிடம் நாட்டை கொடுத்துள்ளீர்கள்” என்று விமர்சித்து நாம் தமிழர் கட்சிக்காரர் பேசியுள்ளார்.

தன்அப்பன் பெயரை பேப்பர் பார்த்து படிக்கும் தலைவன் என்று குறிப்பிட்டுள்ள வார்த்தையை யோசித்துப் பார்க்கும் பொழுது அது மிகவும் கோச்சையாக உள்ளது.

இதை கேட்டு ஆத்திரமடைந்த அந்தப் பகுதியின் திமுகவின் பொறுப்பாளர் செங்கண்ணன் மேடையில் ஏறி ரகளை செய்தார். ஒரு ஆளுங்கட்சி தலைவரை இப்படி கொட்டை தனமாக பேசியதைக் கேட்டாள் எந்த கட்சித் தொண்டனுக்கும் கோபம் வருவது இயல்பான ஒன்றாகும்.

தற்போது இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் வைரலாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.