பிரதமரின் பாதுகாப்புக்கு ஒரு நாள் மட்டும் இவ்வளவு செலவு

*ஒரு நாள் மட்டும் இவ்வளவு செலவு*

நரேந்திர மோடி இந்தியாவின் தற்போதைய மற்றும் 14 வது பிரதமர் ஆவார். இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து இரண்டு முறை பணியாற்றியவர் பட்டியலில் 4வது பிரதமர் இவர். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து இரண்டு முறை பதவியேற்ற முதல் காங்கிரஸ் கட்சி அல்லாத இந்திய பிரதமர் ஆவார்.

சமீபத்தில் பஞ்சாப்பில் கலந்து கொள்ள இருந்த கூட்டத்தில் நாற்காலிகள் காலியாக இருந்ததால் கூட்டத்தை ரத்து செய்த பிரதமர் தன்னை கொல்வதற்கு சதி திட்டம் நடைபெற்றதாக கூறுவது அப்பட்டமான அரசியல் நாடகம் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் பிரதமரின் பஞ்சாப் பயணத்தை அரசியலாக்கி கிடைத்தவரை லாபம் தேடும் முயற்சி சமீபத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இது ஏற்கனவே திட்டமிட்ட நாடகம் என்ற வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரின் பாதுகாப்பு பணியில் உள்ள SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் 123 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாலை வழியாக பிரதமர் பயணிக்க கடைசி சில நிமிடங்களில் எப்படி அனுமதி அளித்தார்கள் என்கிற கேள்விதான் சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

SPG படையினருக்கு மட்டும் 2020-2021ஆம் ஆண்டு ரூபாய் 592 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் பாதுகாப்பிற்கு மட்டும் ஒரு நாளிற்க்கு ரூபாய் 1,67,00,000 செலவாகிறது அல்லது ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 6,75,000 செலவாகிறது.

பிரதமர் உடைய பாதுகாப்பை முழுமையாக பொறுப்பேற்று செயல்படுத்த வேண்டியது SPGயிடம் தான் இருக்கிறது. இந்தப் பொறுப்பை SPG சரியாக நிறைவேற்றியதா என்கிற கேள்வி தானாக எழுகிறது.