ஆசிரியையிடம் கத்திமுனையில் நகை பறிப்பு..?

*ஆசிரியையிடம் நகை பறிப்பு*

கோவையை சேர்ந்த ஆசிரியை அன்புக்கரசி இவர் கோவை சின்னசாமி சாலையில் உள்ள ஆச்சாரியா பாலா சிக்ஷா மண்டிர் இன்னும் தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று ஆசிரியை அன்புக்கரசி பள்ளி ஓய்வறையில் அமர்ந்துள்ளார் அப்போது 35 வயது மதிக்கத்தக்க நபர் அப்பள்ளிக்கு வந்துள்ளார்.

அந்த நபர் நேராக ஆசிரியை அன்புக்கரசி இடம் வந்து தன் மகனை இப்பள்ளியில் சேர்ப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என விசாரித்துள்ளார். ஆசிரியை அன்புக்கரசி உண்மையாகவே இவர் விசாரிக்கத்தான் வந்துள்ளார் என்று நினைத்து பள்ளியில் சேர்ப்பதற்கான நடைமுறைகளை எடுத்துக் கூறியுள்ளார்.

திடீரென அந்த நபர் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியை கழுத்தில் வைத்து அணிந்திருக்கும் நகைகளை கழட்டித் தரவில்லை என்றால் அறுத்துக் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன அந்த ஆசிரியை தன் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மோதிரம் வளையல் உட்பட பத்தரை சவரன் நகையை கலட்டி கொடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த நபர் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பித்து ஓடிவிட்டார். ஆசிரியை அன்புக்கரசி உதவிக்காக சத்தம்போட்டு மற்ற ஆசிரியர்களை அழைத்துள்ளார் மற்ற ஆசிரியர்கள் வருவதற்குள் கொள்ளையன் மறைந்துவிட்டான். இதனையடுத்து ஆசிரியை அன்புக்கரசி காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

பள்ளியின் சிசிடிவி கேமராவில் கொள்ளையனின் முகம் பதிவாகியிருந்தது அந்த வீடியோவை போலீசார் வாங்கி சென்றனர் கொள்ளையனின் முகம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த வீடியோவை வெளியில் யாருக்கும் காட்டாமல் கொள்ளையனை ரகசியமாக தேடி வருகின்றனர்.

பட்டப் பகலில் பள்ளியில ஆசிரியையிடம் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.