தமிழகத்தில் அரசு போஸ்ட் ஆபீஸில் வேலை வாய்ப்பு

*அரசு போஸ்ட் ஆபீஸில் வேலை*

தற்போது தமிழக போஸ்ட் ஆபீஸில் இருந்து மாவட்ட வாரியாக வேலை வாய்ப்புகள் அறிவித்துக் கொண்டிருக்கின்றன. இன்டர்வியூ மூலம் இந்த வேலைவாய்ப்பிற்கு ஆட்கள் தெரிவு செய்கின்றனர் இதற்குத் தேர்வுமுறை என்று எதுவும் இல்லை. வயது வரம்பு 18 வயது முதல் 50 வயது வரை உள்ள நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம், கட்டாயம் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

எந்த Communityஐ சேர்ந்தவர்களுக்கும் Application Fee என்பது கிடையாது, அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் மற்றும் கள அதிகாரி என்கிற பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்கின்றனர்.

docoimbatore.tn@indiapost.gov.in என்ற இணையதள முகவரி மூலம் அல்லது தபால் நிலையங்களிலும் நேரடியாக சென்று Application Form இலவசமாக பெற்றுக் கொள்ளலாம், கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

வருகிற ஜனவரி 28ஆம் தேதி கோயம்புத்தூரில் கோவை தலைமை தபால் நிலையத்தில் இதற்கான இன்டர்வியூ முறை நடைபெறுகிறது, இது மாவட்ட வாரியான வேலைவாய்ப்பு என்பதால் ஒவ்வொரு மாவட்டமாக தற்போது நடத்தி வருகின்றனர்.

Application Formஐ Fill செய்துவிட்டு உங்களுடைய உண்மையான Certificateகளும் மற்றும் அதனுடைய Xerox Copyகளையும் இன்டர்வியூக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.