ஜஸ்ட் மிஸ் Tesla தபித்தது..!

*எலோன் மஸ்க்*

சர்வதேச ஆட்டோமொபைல் துறையில் ஒரு பிரம்மாண்டமான நிறுவனம் டெஸ்லா. உலகமே எலோன் மஸ்க்வுடைய டெஸ்லாவை வியப்புடன் பார்க்கிறது ஏனென்றால் இன்று பில்லியன் டாலர் வர்த்தகம், 200 பில்லியன் டாலருக்கு மேல் சொத்து மதிப்புடன் இயங்கக்குடிய நிறுவனமாகும்.

இந்த வளர்ச்சியை காண டெஸ்லா ஆரம்பத்தில் பல சிக்கல்களை சந்தித்தது. எலோன் மஸ்க் பேபால் நிறுவனத்திற்கு தனது நிர்வனத்தை விற்பனை செய்துவிட்டு அதிக அந்த மொத்த பணத்தையும் SpaceX மற்றும் Tesla ஆகிய நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

2008ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று கிறிஸ்மஸ் தினத்தில் முதலீட்டை திரட்டி ஆக வேண்டும் என்ற கட்டாய நிலையில் இருந்தது. ஆனால் பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் கிறிஸ்மஸ் தினத்தில் விடுமுறையில் இருப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு இருக்கமான சூழலில்தான் இருந்தார் எலோன் மஸ்க்.

எப்படியோ இறுதியில் கிறிஸ்மஸ் தினத்தன்று மாலை 6 மணிக்கு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்தார்கள். இல்லையென்றால் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்காமல் நிறுவனம் திவாலாகி இருக்கும். இதை எலோன் மஸ்க் நான் மறக்க முடியாத நாள் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது 2021 ஆம் ஆண்டில் டெஸ்லா சுமார் 1.07 டிரில்லியன் டாலர்கள் மதிப்பீட்டுடன் உள்ளது.