சிவகார்த்திகேயனை வைத்து கமல்ஹாசன் பல கோடி லாபம்

*பல கோடி லாபம்*

தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்துள்ள கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளது. ரங்கூன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்க உள்ளார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை அதற்குள்ளேயே படம் ஒரு கணிசமான தொகையை லாபம் பார்த்து உள்ளது கூறப்படுகிறது. அதன்படி சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை இணைந்து தயாரிப்பதால் கமல்ஹாசனிடம் அவர்கள் சுமார் ரூபாய் 70 கோடி கொடுத்துள்ளனர்.

இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் 30 கோடி மற்றும் செலவுகள் 20 கோடி போக மீதமுள்ள 20 கோடி கமல்ஹாசனுக்கு லாபம்தான். இதனையடுத்து படம் வியாபாரம் ஆனதும் அதில் 50% கமல்ஹாசன் பெறுவாராம்.

மேலும் தியேட்டர் மற்றும் பல வியாபாரங்களில் இருந்து லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. எப்படி இருந்தாலும் சிவகார்த்திகேயன், கமல் மற்றும் சோனி பிக்சர்ஸ்க்கு ஒரு ஜாக்பாட் என்றே கூறலாம்.