இந்த படத்திற்காக விரதமிருந்த கார்த்தி

*விரதமிருந்த கார்த்தி*

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் கார்த்தி. 2019 இல் இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற திரைப்படம் தான் கைதி.

தற்போது இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பாதி கதையை முடித்து விட்டாராம். உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தின் வேலைகள் முடிந்த பிறகு கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் கைதி திரைப்படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த ஹிந்தி ரீமேக்கில் கார்த்தியின் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு கார்த்தி சபரிமலை மாலை அணிந்து 11 நாட்கள் விரதம் இருப்பார் அதேபோல் அஜய் தேவ்கன் நடிக்கிறார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்தப் படத்திற்காக அஜய் தேவ்கன் உண்மையாகவே மாலையணிந்து 11 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வந்த பிறகு தான் படப்பிடிப்பில் இணைய உள்ளாராம். இந்த செய்தி தற்போது பாலிவுட் வட்டாரங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.