KGF 2 வேற மாரி இருக்கு..?

*KGF 2*

KGF Chapter 2 திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் Pinkvilla ஒரு பிரத்யேக உரையாடலில் ரவீனா டாண்டன் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை அருமையாக குறிப்பிட்டார்.

ரவீனா டாண்டன் கூறுவது” இயக்குனர் பிரஷாந்த் நீலுடன் பணிபுரிவது மகிழ்ச்சி. யாஷ் ஒரு ஜென்டில்மேன் அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. என் தென்னிந்திய திரைத்துறையை நான் விரும்புகிறேன். நான் தெற்கில் வேலை செய்ய விரும்புகிறேன். KGFக்கு முன்னாடி நான் தெலுங்கு படம் பாண்டாவுலு பாண்டாவுலு தும்மேடா பணியாற்றியுள்ளேன் அவர்கள் அனைவரிடமும் பணியாற்றுவதை நான் விரும்பினேன். விஷ்ணு இருந்தார், மோகன்ஜி இருந்தார், எல்லோரும் இருந்தார்கள் நான் அதை முழுமையாக விரும்பினேன்”.

நடிகைக்கு ஹாலிவுட்டிலிருந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. “2000 ஆம் ஆண்டு நீண்ட காலத்திற்கு முன்பு எனக்கு அந்த நேரத்தில் ஆலிவர் ஸ்டோனிடமிருந்து ஒரு வாய்ப்பு கிடைத்தது அவர் அப்போது “அலெக்சாண்டர் தே கிரேட்” படம் எடுத்துக்கொண்டிருந்தார்.

மேலும் என்னிடம் ஸ்கிர்ப்ட் மற்றும் எல்லாமே இருந்தன. எனக்கு என்ன சொல்லவேண்டும் என்று தெரியவில்லை. அப்போது நானும் ராக்கேஷ் மேஹ்ராவும் அக்ஸில் வேலை செய்து கொண்டிருந்தோம். அதனால் நான் “மேஹ்ரா என்னுடன் வாருங்கள் எனக்கு அவருடன் சந்திப்பு உள்ளது” என்று கூறி அவரை அழைத்து சென்றேன்.

ஆலிவர் ஸ்டோனை சந்தித்தோம். இது அவருடன் ஒரு சிறந்த மற்றும் சுவாரசியமான சந்திப்பாக இருந்தது ஆனால் எப்படியோ அது நிறைவேறவில்லை. அதாவது அதில் காட்சிகள் மற்றும் விஷயங்கள் இருந்தன” இதனால் அவருக்கு வசதி இல்லாமல் இருந்ததால் அவர் அதை நிராகரித்தார்.

தற்போது ரவீனா டாண்டனுக்கு நிறைய ஹாலிவுட் வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அவர் மேலும் “நான் பாட்ரிக் டெம்ப்சே மற்றும் ராபர்ட் டோனி ஜே ஆர் உடன் பணிபுரிவதற்கு ஆசையாக உள்ளேன்” என்றார்.

Leave a Comment