KGF 3 Release Date | கே.ஜி.எஃப் 3 வெளியீடும் தேதி

*கே.ஜி.எஃப் 3 வெளியீடும் தேதி*

இந்தியாவில் பாகுபலி இரண்டாம் பாகத்திற்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்டு உள்ள திரைப்படம் கே.ஜி.எஃப் பாகம் 2, கன்னட முன்னணி நடிகரான யாஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது, ஹோம்பலே ஃபிலிம்ஸ் இப்படத்தினை தயாரித்துள்ளது. படத்தின் இசையை இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் அமைத்துள்ளார், இசை உரிமைகள் லஹரி மியூசிக் மற்றும் டி-சீரிஸுக்குச் சொந்தமாகியுள்ளது.

தற்போது இன்று கே.ஜி.எஃப் 2 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது, திரைப்படம் அனைத்து பக்கமும் பிரமாதமான வரவேற்பு பெற்று வருகிறது. கே.ஜி.எஃப் பாகம் 3 உருவாக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கே.ஜி.எஃப் பாகம் இரண்டின் இறுதியில் பாகம் மூன்றிக்கான தொடக்கம் அமைத்துள்ளதால் படக்குழுவினர் அடுத்த பாகத்தை எடுக்கப் போவதாக உறுதி செய்துள்ளனர். கே.ஜி.எஃப் 3 திரைப்படம் கே.ஜி.எஃப் 2 ஐ விட பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கே.ஜி.எஃப் 3இன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் நடைபெற்று பிறகு 2024 ஆம் ஆண்டு வெளியாகும் எனக் கூறப்படுகிறது, மேலும் இப்படத்தில் தமிழ் நடிகர் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கப் போவதாக உறுதிசெய்யப்படாத தகவல் கூறுகின்றனர்.

Leave a Comment