கேஜிஎஃப் யாஷ் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்..?

*கேஜிஎஃப் யாஷ் மகளின் பிறந்தநாள்*

கேஜிஎஃப் திரைப்பட நடிகர் யாஷ் மற்றும் ராதிகா பண்டிட்டின் மகள் அய்ராவின் பிறந்தநாள் விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

கேஜிஎஃப் புகழ் யாஷ் மற்றும் அவரது மனைவி ராதிகா பண்டிட்டின் மகள் அய்ரா டிசம்பர் 2 அன்று தனது மூன்றாவது வயதை எட்டினார். இந்த ஜோடி பெங்களூருவில் உள்ள ஒரு ஆடம்பரமான உணவகத்தில் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கோலாகலமாக விளையாடியதை காணமுடிந்தது. தற்போது அய்ராவின் பிறந்தநாள் விழா படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராதிகா பண்டிட் மட்டும் யாஷ் மிக்கி மவுஸ் தீம் மூலம் அந்த இடத்தை அழகாக அலங்கரித்துள்ளனர். ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அய்ராவுடன் மிகவும் அழகான புகைப்படத்தை வெளியிட்டார். அதில் ராதிகா குறிப்பிட்டுள்ளது “எப்பொழுதும் உன் கையைப் பிடித்துக் கொண்டு இருப்பேன் என் அன்பே! எங்கள் தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்“.