BB 5 ஆமீர் இன் தாய் கொலை செய்யப்பட்டாரா..?

*அமீர்*

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் வீட்டிற்குள் “Wild Card” மூலமாக என்ட்ரி கொடுத்தவர் தான் அமீர். இவர் ஒரு நடன கோரியோகிராபர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கை கதையைப் பற்றி கூறுமாறு ஒரு டாஸ்க் இருக்கும் அது இந்த சீசனில் முன்னதாகவே நடந்துவிட்டது. தற்போது அமீர் மற்றும் சஞ்சீவ்Wild Card” மூலமாக வீட்டிற்குள் நுழைந்தனர். இதனால் தற்போது இவர்கள் இருவருக்கும் தங்களது வாழ்க்கை பயணத்தைப் பற்றி பேச பிக்பாஸ் வாய்ப்பளித்தார்.

அதில் அமீர் நான் எப்படி இவ்வளவு தூரம் வந்துள்ளேன் என்பதே கண்ணீருடன் கூறியுள்ளார்.

அமீர் ஊட்டியை சார்ந்தவர். அமீருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். இவர் ஒரு வயதாக இருக்கும் போதே இவருடைய அப்பா தவறி விட்டார். அதற்கடுத்து அவர் பத்தாவது படிக்கும்போது அவருடைய அம்மா கொல்லப்பட்டார் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் அமீர் மற்றும் அவருடைய அண்ணனும் ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆசிரமத்தில் எந்த வசதியும் இல்லாமல் தனது நாட்களை கஷ்டத்துடன் கழித்தார்.

அமீர் தன்னுடைய 16வது வயதில் கல்லறைக்கும் காவல் நிலையத்திற்குமே சென்ற வண்ணமாக இருந்துள்ளார். ஏனென்றால் அவர் அம்மா கொல்லப்பட்ட வழக்கிற்காக காவல் நிலையம் சென்றுள்ளார் மற்றும் அவரது அம்மா அடக்கஸ்தலத்தீர்க்கும் சென்று வந்திருக்கிறார்.

அமீர் உடைய அம்மாவிற்கு இவர் ஒரு Dancer ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததாக கூறினார். இதனால் அமீர் தன் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக Dancer ஆக வேண்டும் என்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

இவரது கடின உழைப்பால் தற்போது அமீர் ஒரு வெற்றிகரமான Dancer என்றே கூறப்படுகிறது. இவர் தற்போது ஊட்டியில் Ads Crew என்ற நடன பள்ளிக்கூடத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

அவரது பள்ளி மாணவர்களை வைத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் அனைத்திலும் கலந்து ஒரு பெரும் பெயர் பெற்றார். இதனால் தான் இவருக்கு விஜய் டிவியிலிருந்து பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இவர் சில படங்களுக்கும் கோரியோகிராபி செய்துள்ளார். அமீர் கொரியோகிராபராக பணியாற்றிய முதல் படம் “ஏண்டா தலையில எண்ண வெக்கல“.

இதுதான் அமீரைப் பற்றி பல பேருக்கு தெரியாத விஷயமாகும். இந்த விஷயங்களையெல்லாம் இமாத் என்ற ஒருவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அவர் ஒரு பிக் பாஸ் Insider என்று கூறப்படுகிறது.