8 மருத்துவ கட்டுக்கதைகளை பற்றி தெரியுமா..?

*8 மருத்துவ கட்டுக்கதைகள்*

இளம் வயதில் நாம் சேவ் செய்தால் நன்கு தாடி வளரும் என்று கூறுவர் . அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு சுமார் ஒரு 10 முறை அல்லது 20 முறை மொட்டை அடிப்பார்கள் அதனால் அவர்களுக்கு நன்கு முடி வளரும் என்று கூறுவர் ஆனால் அறிவியலாளர்கள் மொட்டை அடிப்பதன் மூலமோ அல்லது சேவ் செய்வதன் மூலமோ முடி வளர்ச்சிக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுகின்றனர். அதனால் சேவ் செய்தல் மற்றும் மொட்டை அடித்தல் மூலம் நன்கு முடி வளரும் என்பது முற்றிலும் பொய்.

எண்ணெய் பொருட்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை உண்பதிணாலேயே முகத்தில் அதிகமாக பரு வருகிறது என்று கூறுவர். ஆனால் அறிவியலாளர்கள் இதை முற்றிலும் மறுக்கின்றனர் தேவையற்ற பொருட்களை உண்பதினால் முகப்பரு வருவது என்பது முற்றிலும் மறுக்கப்படுகிறது மற்றும் முகப்பரு வருவதற்கு காரணம் ஹார்மோன் மாற்றத்தினால் என்றும் கூறுகின்றனர்.

முடி உலர்த்தி பயன்படுத்தி முடி காய்கிறது என்று நாம் நம்பிக் கொண்டிருப்பது முற்றிலும் பொய் முடி உலர்த்தி பயன்படுத்துவதின் மூலம் வெறும் மேலிருக்கும் பகுதி மட்டுமே காய்கிறது மற்றும் கீழ்புறம் அப்படியே ஈரப்பதம் ஆகவே தான் இருக்கிறது. கீழ் புறத்தையும் உலற வைக்கிறேன் என்று அதிகமாக உலர்த்தியை பயன்படுத்தினால் அது முடி கொட்டும் பிரச்சனை உண்டாக்கலாம் என்றும் துண்டு பயன்படுத்தி காயவைப்பதே சிறந்தது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

நாம் தும்மும்போது நமது இதயம் சிறிது நேரம் நின்று விடும் என்று கூறுவர். ஆனால் மருத்துவர்கள் இதனை மறுக்கின்றன மற்றும் இதயம் இறந்தபிறகு நிற்கும் என்றும் தும்மும் போது நமக்கு அதிக ரத்த அழுத்தம் ஏற்படும் காரணத்தினால் இதயம் சிறிது நேரம் தாமதித்து ரத்தத்தை வெளியிடும் என்று கூறுகின்றனர் அதனால் தும்மும் போது இதயம் நின்றுவிடும் என்பது முற்றிலும் பொய்.

சுவிங்கம் முன்றுவிட்டு நாம் தெரியாமல் முழுங்கி விட்டால் அது வயிற்றுக்குள் சென்று ஒட்டிவிடும் என்று கூறுவர். ஆனால் நம்முடைய வயிறு அது தேவையில்லாத பொருள் என்று அதனை வெளியேற்றி விடும் அதனால் அது ஒட்டிக்கொள்ளும் என்று கூறுவது முற்றிலும் பொய்.

தலையில் ஒரு வெள்ளை முடி இருந்து அதனை புடுங்கி விட்டால் நமக்கு நிறைய வெள்ளை முடி வந்துவிடும் என்று கூறுவது முற்றிலும் பொய். ஒரு வெள்ளை முடியை பிடுங்கினால் அந்த ஒரே ஒரு வெள்ளை முடி மட்டுமே திரும்பவும் முளைக்கும் அது அல்லாமல் நிறைய வெள்ளை முடி முளைக்கும் என்பது முற்றிலும் பொய்.

வயிறு சுத்தமாகும் என்று பலரும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பேதி மாத்திரைகள் எடுத்துக் கொள்வர். ஆனால் வயிறு தேவையற்ற பொருட்களை தானாகவே வெளியேற்றிவிடும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை பேதி மாத்திரை பயன்படுத்துவது தேவையற்ற பல புது பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். வயிறு சரியில்லை என்றால் மருத்துவரை அணுகி தேவையான மருந்தை எடுத்துக் கொள்வதே சிறந்த முறையாகும்.

பத்தாயிரம் அடி ஒரு நாள் தொடர்ச்சியாக நடப்பதன் மூலம் நம் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர். இதற்காக ஸ்மார்ட் வாட்ச் வேலை பயன்படுத்தி நடக்கும் அடிகளை பலரும் கணக்கும் செய்து வருகின்றனர். இது 1964ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் போது பீடோ மீட்டர் என்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போது முதலே இதனை பல தொழில் யுக்தி கொண்டு இதனை சந்தை படுத்திக்கொண்டு உள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே தற்போது ஸ்மார்ட் வாட்ச்கள் ஒரு சந்தைபடுத்துதல் முறையாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஹார்வேர்டு யூனிவர்சிட்டி செய்த ஆராய்ச்சியின் மூலம் ஒவ்வொரு மனிதனின் மெட்டபாலிசம் அளவு வேறுபடும் உதாரணத்திற்கு ஒரு வயதான மனிதர் ஒரு நாளைக்கு 4200 அடி நடந்தாலே அவர்களது மெட்டபாலிச அளவை சீராக வைத்திருக்க போதுமானது.

அதுபோல ஒரு இளைஞர் ஒரு நாளிர்க்கு 6000 முதல் 7000 அடி நடந்தாலே அவர்களது உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள போதுமானது என்ற அந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வருகிறது. அதனால் பத்தாயிரம் அடி ஒரு நாளைக்கு நடப்பதன் மூலம் நாம் ஆரோக்கியமாக இருப்போம் என்பது ஒரு சந்தைப்படுத்துதல் முறையே ஆகும்.

இதுபோல பல கட்டுக்கதைகள் நம்மை சுற்றி இருக்கின்றன. அதனால் ஒருவர் எந்த விதமான கட்டுக்கதைகளையும் நம்பாமல் ஆராய்ந்து அறிவியலாளர்கள் கூறுவதனை கேட்டும் மருத்துவர்களின் அறிவுரைகளை கேட்டும் கட்டுக்கதைகள் மடியாமல் இருப்பதே நல்லது ஆகும்.