இலவசமாக Lamborghini கார்..?

*இலவசமாக Lamborghini*

Mr.Beast என்ற மிகப்பிரபலமான Youtuber நடத்திய போட்டி ஒன்றில்தான் இலவசமாக ஒரு நபருக்கு Lamborghini கார் வழங்கியுள்ளார்.

Mr.Beast என்ற யூடியூப் சேனல் சுமார் 80 மில்லியனுக்கும் மேல் Subscribersகளை கொண்டது. இந்த சேனல் அடிக்கடி இந்த மாதிரியான நிறைய போட்டிகள் வைத்து இந்த மாதிரி பரிசுகளை வழங்குவது உண்டு.

அப்படிப்பட்ட ஒரு போட்டியில் தான் Lamborghini கார் பரிசாக வழங்கப்பட்டது.

அந்த போட்டி என்னவென்றால் 50 நபர்களை அழைத்து ஒரு பச்சைநிற Lamborghini கார் நடுவில் நிற்க வைத்து அதை சுற்றி அந்த 50 நபர்களும் தனது ஒரு கையை அந்த காரில் வைத்து இருக்க வேண்டும். யார் இறுதியாக அந்த காரில் இருந்து கையை எடுக்கிறாரோ அவரை வெற்றியாளர் அவருக்கே அந்த Lamborghini கார்.

இந்தப்போட்டியில் சுவாரசியமும் வேடிக்கைகளும் நிறைவாக இருந்தது. பலரும் கடுமையாக போட்டி போட்டனர்.

இறுதியில் பல மணி நேரம் கழித்து lowkey என்ற நபர் வெற்றி பெற்றார். இரண்டாவது வந்த நபருக்கு $40,000 டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.

இதேபோல் நமது ஊரிலும் போட்டி வைத்தால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.