எந்த பூஸ்டர் டோஸ் சிறந்தது அனைவரு‌ம் தெரிந்து கொள்ளுங்கள்

*பூஸ்டர் டோஸ்*

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவலால் உலகமே ஸ்தம்பித்துப்போனது. பொருளாதார ரீதியாக பல மக்கள் பல நாடுகள் பெரும் சரிவை சந்தித்து பஞ்ச நிலைக்கு தள்ளப்பட்டன.

கொரோனா தொற்றால் பல கோடி மக்கள்கள் பாதிக்கப்பட்டன மற்றும் பல கோடி நபர்கள் இறந்தன. கொரோனா என்பது உலகம் அதுவரை கண்டிராத பெரும் ஆபத்து என்றே கூறலாம். இன்றளவும் இந்த கொரோனா பரவல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. முழுமையான இதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.

கொரோனாவிலிருந்து நம்மளை காப்பாற்றுவதற்காக அனைத்து நாடுகளிலும் கட்டுப்பாடுகள் ஊரடங்குங்கள் விதிக்கப்பட்டது. பிறகு கொரோனா வந்தால் அதனை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் இணைந்து தடுப்பூசி(Covaxin, Covid Shield) கண்டுபிடித்தன.

இந்தத் தடுப்பூசிகள் மக்களுக்கு கொரோனா வந்தாள் அதனை எதிர்கொள்வதற்கு இது உதவியாக இருக்கும் என்று உலக நாடுகள் 18 வயதுக்கும் மேல் உள்ள மக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்தியாவில் பல கோடி நபர்கள் இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர். ஏதாவது ஒரு தடுப்பூசியை(Covaxin or Covid Shield) அவசியம் இரண்டு முறை போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த தடுப்பூசிகளை இரண்டு முறை போட்டுக் கொண்ட பிறகு தற்போது கோவிட் பூஸ்டர் டோஸ் என்ற தடுப்பூசியை மக்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

அந்த பூஸ்டர் தடுப்பூசி என்றால் என்ன, அதை யார் போட்டுக்கொள்ள வேண்டும், எதுக்காக போட்டுக்கொள்ள வேண்டும், சிறியவர்கள் போட்டுக் கொள்ளலாமா, பெரியவர்கள் போட்டுக் கொள்ளலாமா, ஏற்கனவே இரண்டு தடுப்பூசி டோஸ்கல் போட்டவர்கள் போட்டுக் கொள்ளலாமா அல்லது போடாதவர்கள் போட்டுக் கொள்ளலாமா, இதனால் என்ன நன்மை என்ன தீமை இப்படிப் பல கேள்விகள் இதைப் பற்றி மக்களுக்கு இருக்கிறது.

ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகள்(Covaxin or Covid Shield) போட்டுக் கொண்டவர்கள் இந்த பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டவர்கள் சரியாக இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டு அதிலிருந்து 90 நாட்களுக்குப் பிறகு இந்த பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

எந்த பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பார்த்தால் முதல் இரண்டு தடவை எந்த தடுப்பூசி(Covaxin or Covid Shield) போட்டிருக்கிறீர்களோ அதே பூஸ்டர் வகை தடுப்பூசி தான் போட்டுக் கொள்ள வேண்டும்.