மாநாடு தலைவன் வரான் வழி விடு..?

*மாநாடு விமர்சனம்*

மாநாடு திரைப்படத்தை வெளியிடுவதற்கு நிறைய பிரச்சனைகள் எழுந்தன

சிம்பு நீக்கப்பட்டார், அவர் நீக்கப்படவில்லை, படம் வருகிறது, படம் வரவில்லை, நவம்பர் 25ஆம் தேதி வியாழக்கிழமை படம் வெளியிடப்படுகிறது என்று தெரிவித்தனர் ஆனால் புதன்கிழமை இரவு படம் தள்ளிப் போகிறது என்று தெரிவித்தனர் இதனால் படம் வெளியாகுமா என்று பல குழப்பங்கள் எழுந்தது. படம் வெளியாகும் தேதி அன்று காலை 7 மணி வரை படம் திரையிடப்படுமா என்று குழப்பமாகவே இருந்தது இறுதியில் படம் வெளிவந்து இவ்வளவு நாள் காத்திருந்தற்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது.

அப்துல் காலித்தாக சிலம்பரசன் மாநாடு படத்தில் நடித்திருக்கிறார். எஸ் ஜே சூர்யா வில்லனாக தனுஷ்கோடி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் வெங்கட்பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். ஹீரோயினியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். பிரேம்ஜி, ஒய்ஜி மகேந்திரன், சந்திரசேகர் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

மாநாடு ஒரு “டைம் லூப்” என்னும் கான்செப்ட்டை வைத்து அமைத்த திரைக்கதையாகும். கதாநாயகன் துபாயிலிருந்து இந்தியாவிற்கு விமானம் முலம் தனது நண்பனை அவனின் காதலியோடு சேர்த்து வைப்பதற்காக வருகிறார். நண்பனின் காதலி ஒரு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் அவளுக்கு அன்று கல்யாணம். கதாநாயகன் மற்றும் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து கல்யாணத்திற்கு சென்று பெண்ணே யாருக்கும் தெரியாமல் அழைத்து செல்கிறார்கள் அப்போது செல்லும் வழியில் குறுக்கே ஒரு நபர் வண்டியில் வந்து மோதி இறந்து விடுகிறார். இதனை அறிந்த போலீசார் மற்றும் கதையின் வில்லனான தனுஷ்கோடி அங்கு வந்து அவர்களை கைது செய்கின்றனர்.

கைது செய்து அவர்களை ஒரு குடோனுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு வைத்து வில்லன் கதாநாயகனை மிரட்டி நடக்கவிருக்கும் மாநாட்டில் முதலமைச்சரை நீ கொலை சேய்ய வேண்டும் என்று அனுப்பிவிடுகிறார். கதாநாயகனும் வேறு வழி இல்லாமல் முதலமைச்சரை வில்லன் கொடுத்த துப்பாக்கியால் சுட்டு விடுகிறார். அதற்குப் பிறகு கதாநாயகனுக்கு என்ன ஆகிறது அதிலிருந்து எப்படி கதாநாயகன் தப்பிக்கிறார் என்று “டைம் லூப்” கான்செப்டாக நடக்கிறது தான் மீதி கதை.

இப்படத்தில் சுவாரசியமான திரைக்கதையை அமைத்துள்ளார் வெங்கட்பிரபு. சிம்பு மற்றும் எஸ் ஜெ சூர்யா இருவரும் தனது நடிப்புத் திறமையினால் ஒவ்வொரு ஃபிரேமிலும் கட்டளைகளையும் பாராட்டுக்களையும் பெற்றனர்.

பொதுவாக டைம் லூப் கான்செப்ட்டை பெரும்பாலும் ஹாலிவுட்டில் தான் பார்க்க முடியும் அதை புரிந்து கொள்ளவும் மிகக் கடினமாக இருக்கும். ஆனால் வெங்கட் பிரபு இந்த கான்செப்டை எடுத்துக் கொண்டு தமிழ் ரசிகர்களுக்கு புரியும்படியான திரைக்கதையை அமைத்துள்ளார் இதுவே படத்திற்கான பெரிய பிளஸ் என்று கூறலாம்.

இப்படத்தை எடிட் செய்த பிரவீன் கேஎல் படத்தில் முக்கியமாக பாராட்ட வேண்டிய நபர் ஆவார். ஏனென்றால் படத்தில் ஏதாவது ஒரு ஐந்து நிமிடம் தவறாக எடிட் செய்திருந்தால் படம் முழுவதும் குழப்பம் ஏற்பட்டிருக்கும். இப்படத்தை எடிட் செய்த பிரவீன் கே எல்லிற்கு ஒரு ஹேட்ஸ் ஆப். படத்தின் பின்னணி இசை சிறப்பாக அமைக்கப் பட்டிருந்தது. இப்படத்திலும் யுவன் சங்கர் ராஜா தன் கைவசத்தை காட்டி மிரட்டி உள்ளார்.

படத்தில் அனைவருமே தனக்குறிய கதாபாத்திரத்தை பொருத்தமாக நடித்துள்ளனர்.

மாநாடு திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதுமையான ஃபேன்டஸி க்ரைம் த்ரில்லர் வடிவில் உள்ளது.

நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் வெங்கட்பிரபு இருவருக்கும் இப்படம் தேவையான ஒரு வெற்றியை தந்துள்ளது.

மாநாடு திரைப்படத்திற்கான காரை சென்ட்ரலின் Rating – 4/5.