GPayயில் சம்பாதிக்கலாமா | தெரியாத ரகசியங்கள்..?

*GPayயில் சம்பாதிக்கலாமா*

முந்தைய காலத்தில் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு அல்லது ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பணம் அனுப்புவது வங்கி மூலமாக மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது இந்த நவீன விஞ்ஞானம் மிக்க காலத்தில் ஒரு நிமிடத்திற்குள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு நாம் பயன்படுத்தும் மொபைல் மூலம் பணம் அனுப்புவது சாத்தியமாகிவிட்டது. இது ஸ்மார்ட் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவராலும் பயன்படுத்த முடியும்.

மொபைல் போனில் இருந்து பணம் அனுப்புவதற்கு நிறைய ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் முன்னணியாக இருக்கக் கூடியது GPay, Paytm, Phonepe போன்ற ஆப்ஸ்கள்.

இது போன்ற ஆப்ஸ்கள் எப்படி சம்பாதிக்கிறார்கள் என்று தெரியுமா?

இந்த பயன்பாடுகளை வைத்து பணம் அனுப்பும் போதும் அல்லது எதற்காவது பணம் செலுத்தும் போதும் நம்மளிடம் இவர்கள் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் GPay-யின் கடந்த ஒரு ஆண்டுகால வருமானம் ஆயிரம் கோடிக்கு மேல்.

இது எப்படி சாத்தியம்?

நாம் இந்த ஆப்ஸ்கள் மூலம் பணம் அனுப்பும் பொழுது நமக்கு இவர்கள் Rewards என்ற பெயரில் ஒரு டோக்கன் கொடுப்பார்கள் அதில் முக்காவாசி Better Luck Next Time என்ற வசனம் தான் வரும் அதன் மூலமாக இவர்கள் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள்.

அடுத்து நாம் பயன்படுத்தும் Sim Cardகளின் நிறுவனங்கள் இவர்களுக்கு பணம் செலுத்துகிறது ஏனென்றால் நாம் இந்த ஆப்ஸ் மூலமாக நம்முடைய சிம்மிற்கு ரீசார்ஜ் செய்வதனால்.

இப்போது பெரும்பாலும் நாம் யாரும் கூட்டத்தில் நின்று மின் கட்டணம் பில் கேஸ் கட்டணம் பில் கட்டுவதில்லை. இந்த ஆப்ஸ்கள் மூலமாக ஒரே ட்டச்சில் பில் பணம் செலுத்தி விடுகிறோம் இதற்காக சென்ட்ரல் கவர்ன்மெண்ட் இவர்களுக்கு பணம் செலுத்துகிறது.

அதுமட்டுமில்லாமல் நாம் அந்த ஆப்ஸ் மூலமாக பணம் செலுத்திய பிறகு நமக்கு Rewards அளிப்பார்கள் அதில் சில பொருள்களுக்கு ஆஃபர்கள் அமைந்து வந்திருக்கும் அது நமக்கு பெரும்பாலும் பயன்படாது. அந்தப் பொருட்களின் நிறுவனங்கள் இந்த ஆப்ஸ் உரிமையாளர்களுக்கு பணம் செலுத்துகிறார்கள்.

இதன் மூலமாகத்தான் Gpay, Paytm, Phonepe போன்ற நிறுவனங்கள் சம்பாதிக்கிறார்கள்.

Leave a Comment