மாளவிகா ரிஎன்ட்ரி வெறித்தனமா இருக்கும்..!

*ரிஎன்ட்ரி வெறித்தனமா இருக்கும்*

வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் பாடலை பார்த்து ரசிச்ச மாளவிக்காவை இப்போது எங்கு காணாம் இன்று பலரும் தேடி இருப்போம்.

தற்போது மாளவிகா தான் மீண்டும் நடிக்க போவதாக தகவல் வந்துள்ளது.

இயக்குனர் பொன் குமரன் இயக்கமுள்ள கோல்மால் திரைப்படத்தில் மாளவிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முன்னணி கதாபாத்திரங்களாக நடிகர் ஜீவா மற்றும் நடிகர் சிவா நடிக்க உள்ளனர். இதில் நடிகர் ஜீவாவிற்கு பாஸாக மாளவிகா நடிக்க உள்ளார்.

மாளவிகா தனது திரைப் பயணத்தை 1999 இல் வெளியான உன்னைத்தேடி எனும் திரைப்படத்தில் நடிகர் தல அஜித் குமாருக்கு ஜோடியாக நடிக்கத்தோடங்கினார். இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் பல ரசிகர்களின் மனதையும் பரித்தார்.

ஏன் இவ்வளவு நாள் நடிப்பை விட்டு தள்ளி இருந்தீங்க என்று கேட்டபோது அவர் கூறியது” 2008ல் தளபதி விஜய் நடித்த குருவி படத்தில் ஒரு சாங்கில் வந்து இருப்பேன் அதற்குப் பிறகு என்னுடைய பிரக்னன்சி காலம் ஆரம்பித்துவிட்டது 2009 இல் எனக்கு ஒரு குழந்தை பிறந்தது அதற்குப் பிறகு இரண்டு வருடம் கழித்து இன்னொரு குழந்தை பிறந்தது அதனால் என்னால் சினிமாவில் நடிக்க முடியவில்லை.

என்னுடைய குழந்தைகள் கூடவே என்னுடைய நேரத்தை செலவிட வேண்டியதாகிவிட்டது. இதனால்தான் நான் சினிமாவை விட்டு 13 வருடங்கள் தள்ளி இருந்தேன். நான் என் பசங்களை பார்த்துக்கொண்டிருந்தபோது எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன நான் திரும்பி சினிமாவிற்கு வருவதாக இருந்தால் சின்ன சின்ன ரோல்களில் நடிப்பதற்கு எனக்கு விருப்பமில்லை அதனால் எனக்கென்று ஒரு நல்ல ரோல் வருவதற்காக இத்தனை வருஷமா காத்திருந்தேன்.

இந்த கோல்மால் படத்தில் நான் ஜீவாவிற்கு பாஸாக நடிக்கப் போகிறேன் இதில் எனக்கு நிறைய ரோல்கள் இருப்பதால் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன். இதற்குப் பிறகு வரும் காலங்களில் நான் நிறைய ப்ராஜெக்ட் களில் நடிக்கப் போகிறேன் எல்லாம் வெயிட்டிங்லே உள்ளது. என் ரசிகர்களை நான் முன் எப்படி நடித்தேன் ஓ அப்படியே நடித்து அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்வேன்“.

கூடிய விரைவில் மாளவிகாவை திரையில் பார்க்கலாம் என்பது உறுதியாகியுள்ளது.