நான் நல்லது செய்தால் கூட என்னை பலரும் ஏளனம் செய்கிறார்கள்.

*பலரும் ஏளனம் செய்கிறார்கள்*

நான் நல்லது செய்தால் என்னை திட்டுகிறார்கள் என்ற குழப்பத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்வது நமக்கு மிகவும் நல்ல பயன்களை தரும் மற்றும் நமது உறவுகள் இடையே தேவையற்ற மனஸ்தாபங்கள் வந்து விடாமல் இருப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நல்லது என்பது ஒரு ஒருவரின் பார்வையில் வேறுபடும் அதனை முதலில் நாம் நன்கு புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நமக்கு நல்லது என்று தோன்றுவது மற்றவர்களுக்கு நல்லதாக இல்லாமல் இருக்கலாம் உதாரணத்திற்கு 12வது படிப்பை முடித்து விட்ட ஒரு மாணவன் படிப்பை விட அவனுக்கு விளையாட்டின் மேல் ஆர்வம் இருப்பதனால் விளையாட்டில் பயிற்சி பெற்று வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்திருப்பான் ஆனால் உங்களுக்கு சரியாக வராமல் நீங்கள் அவனை பொறியியல் படிக்க கூறி மற்றும் அவனது பெற்றோர்களையும் ஒப்புக்கொள்ள வைப்பீர்கள் அவன் வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வருவான் ஆனால் அவர்களிடம் மகிழ்ச்சியே இருக்காது அதற்கு காரணமாக அமையலாம்.

இதுபோல் நல்லது என்பது நமது பார்வையில் ஒரு மாதிரியாக இருக்கலாம் ஆனால் அவர்களது பார்வையில் வேறு ஒரு மாதிரியாக இருக்கும்.

ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு முடிவு சுதந்திரம் உள்ளது. எனக்கு நான் பிடித்ததை செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு மனிதரும் விரும்புவார்கள் இது இயற்கையாகவே மனித இயல்பு. அதை சிதைக்கும் வண்ணம் நாம் எடுக்கும் முடிவை அவர்கள் மீது வற்புறுத்தினால் அவர்களது முடிவு சுதந்திரம் பறிபோகும் அதனால் மற்றவர்களுக்கு நம்மை பிடிக்காமல் போகலாம்.

அதனால் நமக்கு நல்லது என்று தோன்றுவதை மற்றவர்கள் மீது திணிப்பது தவறு. ஒவ்வொரு நபரும் என்ன தவறு செய்தாலும் அந்த தவறை உணர்ந்து பின்னர் சரியாக மாறுவர் அதுவே ஒரு நபருடைய வாழ்க்கையின் பயணம். அதை மாற்றும் வண்ணம் நீங்கள் அது தவறு என்று சுட்டிக்காட்டி அதற்கு சரியான ஒரு முடிவை அவர்கள் மீது திணித்தால் உங்கள் மீது அவர்களுக்கு வெறுப்பு உண்டாகும்.

நீங்கள் என்ன நல்ல எண்ணத்தில் உதவி செய்தாலும் அது தவறாக போவதற்கும் வாய்ப்புகள் உண்டு அதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் உங்களுக்கு என்ன நல்ல எண்ணம் இருந்தாலும் உங்களின் செயல்பாடுகளால் அது வேறு மாதிரியான முடிவை ஏற்படுத்தலாம் மனிதர்கள் அனைவரும் முடிவையே பெரிதாக நினைக்கக் கூடியவர்கள் இது இயற்கையிலேயே மனிதனுடைய இயல்பு.

நான் நல்ல எண்ணங்களோடு நல்ல செயல்களையே செய்கின்றேன் ஆனால் மக்களுக்கு என் மீது கோபம் ஏற்படுகிறது இதனால் நான் ஏன் நல்லது செய்ய வேண்டும் ? என்ற கேள்வி உங்களிடம் ஏற்படலாம். இந்த கேள்வியை நீங்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் இதுவே உங்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தும்.

நான் செய்வதின் நன்மையை உணர்ந்து மற்றவர்கள் என்னை பாராட்ட வேண்டும் என்று எண்ணாமல் எனக்கு நல்லது என்று தோன்றுகிறது அதனால் அவர்கள் பாராட்டினாலும் சரி கோபப்பட்டாலும் சரி எனக்கு நல்லது என்று தோன்றுகிறதே நான் செய்யப் போகிறேன் என்ற எண்ணத்தை நாம் கையாள வேண்டும்.

நான் எனக்கு தோன்றுவதை மட்டும் எனக்கு பிடித்ததை செய்கிறேன் இதற்கு என்ன விளைவு வந்தாலும் நான் சந்திக்க தயார் என்ற எண்ணம் உங்களுக்கு வந்துவிட்டால் நீங்கள் நல்லது செய்தது மற்றவர்களுக்கு கோபம் ஏற்பட்டாலும் உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது.