பைப்பை திறந்தால் கொட்டும் பணம்..?

*கொட்டும் பணம்*

கர்நாடகா மாநிலத்தில் லஞ்சத்தில் திளைத்த அரசு அதிகாரிகள் வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சோதனையில் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளது.

குறிப்பாக பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவரது வீட்டின் பைப்லைனில் மட்டும் ரூபாய் 40 லட்சத்தை பதுக்கி வைத்துள்ளனர். இவை அனைத்தையும் அரசு அதிகாரிகள் கைப்பற்றினர்.

இச்சம்பவத்தின் வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கர்நாடகா அரசுத்துறைகளில் லஞ்சத்தில் திளைத்த 15 அரசு அதிகாரிகளை குறிவைத்து அம்மாநில ஊழல் தடுப்புப் பிரிவினர் சுமார் 68 இடங்களில் சோதனை மேற்கொண்டனர் இதில் தங்கம் மட்டும் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளது ஏராளமான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப் பட்டுள்ளது.

அரசு உயர் துறைகளில் வேலை பார்க்கும் அரசு அதிகாரிகள் லஞ்சத்தில் திளைப்பதாகவும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பதாகவும் ஊழல் தடுப்பு பிரிவிற்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். 15 அதிகாரிகளை குறிவைத்து சோதனையில் இறங்கியிருந்தனர்.

அவர்கள் அனைவரும் அம்மாநில வருவாய்துறை விவசாயத்துறை மருத்துவத்துறை மற்றும் பொதுப்பணித் துறையில் பணியாற்றி வருபவர்கள். பெங்களூரு மாநகர உயர் அதிகாரிகளுக்கும் சோதனை தப்பவில்லை மாநிலங்களில் 68 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 8 கண்காணிப்பாளர்கள் தலைமையில் 400 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சோதனையில் லஞ்சப் பணத்தில் வாங்கி கொடுக்கப்பட்ட நகைகள் சொத்து ஆவணங்கள் அனைத்தையும் கைப்பற்றினர்.

கடக் மாவட்டத்தில் விவசாயத்துறை இணை ஆணையர் ரூதேஷ் அப்பார் வீட்டில் மட்டும் மூன்றரை கோடி உள்ள 9 கிலோ தங்கம் மற்றும் 15 லட்சம் ரொக்கப் பணம் மட்டும் 100 கோடிக்கு மேல் சொத்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

குட்லுபூர் மாவட்டத்திலுள்ள லட்சுமி நரசிம்மா வீட்டிலிருந்து 5 கிலோ தங்கம் 10 கிலோ வெள்ளி மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

15 அதிகாரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள் மற்றும் பொருள்கள் மதிப்பிட்டு செய்யப்பட்டு வருவதாகவும் அவர்களின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை மதிப்பையும் ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்கள்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அதிகாரிகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அம்மாநில அதிகாரிகளுக்கு இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.