2021ல் அதிகமாக விமர்சிக்கப்பட்ட விஷயங்கள்!

*விமர்சிக்கப்பட்ட விஷயங்கள்*

2021 சர்ச்சைகள் நிறைந்தது மற்றும் தென்னிந்திய திரைப்படத் துறையும் வேறுபட்டதல்ல. தொற்றுநோய் காரணமாக 2021இல் திரையுலகம் மெதுவான வேகத்தில் இயங்கினாலும் பல திரைப்படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் பல்வேறு காரணங்களுக்காக தலைப்புச் செய்தியாக வந்தன.

தனிப்பட்ட முன்னேற்றங்கள் அல்லது குறிப்பிட்ட கருத்துக்கள், பல பிரபலங்கள் மற்றும் திரைப்படங்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளன. மேலும் இந்த ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவடையும் என்பதால் அவற்றைப் பார்ப்போம்.

சமந்தா நாக சைதன்யா

சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் 2017இல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திடீரென்று இந்த ஆண்டு இருவரும் பிரிந்தனர் இது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.

தளபதி விஜய்

தளபதி விஜய் தனது பெற்றோருக்கு எதிராக புகார் அளித்தார் ஏனென்றால் அவர் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்தற்காக மற்றும் தளபதி விஜயின் காரிற்க்கு ரூபாய் ஒரு லட்சம் மெட்ராஸ் ஹைகோர்ட் வரி கட்டாதர்க்காக அபராதம் விதித்தது.

ஜெய் பீம்

சூர்யா நடித்து வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் மிகச் சிறந்த படம் என அழைக்கப்பட்டது. ஆனால் சிலரால் கண்டனத்திற்கும் உள்ளாகியது. இப்படத்திற்கு எதிராக சில சமூகங்கள் வழக்குப்பதிவு செய்தனர்.

சிலம்பரசன் டிஆர்

நடிகை சிம்பு பல ஆண்டுகள் கழித்து மாநாடு திரைப்படம் மூலம் வெற்றியை சந்தித்தார். மாநாடு திரைப்படம் எல்லாராலும் பாராட்டப்பட்டு வெற்றி பெற்றது. பலர் சிம்பு இனிமே அவ்வளவுதான் என்று சொன்னவர்கள் எல்லாம் வாயடைத்துப் போகும்படி தன் உடல் எடையை குறைத்து அசத்தினார்.

பாலகிருஷ்ணா & ஏஆர் ரகுமான்

இந்திய சினிமாவின் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் யார் என்று எனக்கு தெரியாது என்ற பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார். இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.