மார்ச் மாதம் வெளியாக கூடிய திரைப்படங்கள்

*மார்ச் மாத திரைப்படங்கள்*

இந்த மார்ச் மாதத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளியிடுவதற்கு தயாராக உள்ளது, ஏனென்றால் கடந்த சில மாதங்களாக கொரோனாவின் பரவலின் காரணமாக பல கட்டுப்பாடுகள் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது அந்த கட்டுப்பாடுகளை எல்லாம் அரசாங்கம் நீக்கிவிட்டனர் அதனால் ஏராளமான படங்கள் மார்ச் மாதம் திரையில் வர இருக்கின்றது. தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் அனைத்து மொழிகளிலும் வரக்கூடிய படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தமிழில் வரக்கூடிய திரைப்படங்கள்:

ஹாய் சினாமிகா

மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடித்து மார்ச் மாதம் 3ஆம் தேதி வெளிவர கூடிய திரைப்படம் ஹாய் சினாமிகா, இப்படம் தமிழில் டப் செய்து வெளியாக இருக்கிறது.

சல்பஹுர்

பெண் நடிகரான யாஷிகா ஆனந்த் போலீஸ் அதிகாரியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்ற திரைப்படம் தான் சல்பஹுர், இப்படம் வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

எதற்கும் துணிந்தவன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிப்பின் நாயகன் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தினை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார், வரும் மார்ச் மாதம் 10-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் எந்த படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குருதி ஆட்டம்

அதர்வா முரளி நடிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குருதி ஆட்டம், இப்படம் மார்ச் மாதம் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

ராதே ஷ்யாம்

பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளிவர இருக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம், இப்படம் மார்ச் மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

RRR

தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் RRR, இப்படம் பல காரணங்களால் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போடப்பட்டது தற்போதைய இறுதியாக மார்ச் மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

டான்

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான், இப்படம் மார்ச் மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.