நிகர நேரடி வரி வசூல் ஆண்டுக்கு 60% அதிகரித்துள்ளது..!

*நிகர நேரடி வரி வசூல்*

இந்த ஆண்டு இதுவரை மத்திய அரசின் நிகர நேரடி வரி வசூல் 9.45 டிரில்லியனைத் தொட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 60.8% வளர்ச்சியடைந்துள்ளது என்று நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜூன் செப்டம்பர் டிசம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் வரவிருக்கும் வருடாந்திர முன்கூட்டிய வரி வசூல்களின் 4 தவணைகளில் மூன்றாவது தவணைக்குப் பிறகு டிசம்பர் 16 இல் உள்ள சமீபத்திய புள்ளி விவரங்கள் நேரடி வரி ரசீதுகளைக் குறிக்கிறது.

இந்த ஆண்டு இதுவரையிலான நிகர நேரடி வரி ரசீதுகள் தோற்றுநோய்க்கு முந்தைய நிதியாண்டின் 2020 ஆண்டுடன் ஒப்பிடும் போது 40% வளர்ச்சியைக் காட்டுகிறது. வருமான வரித்துறை இந்த ஆண்டு இதுவரை ரூபாய் 1.35 டிரில்லியன் வரி திரும்பப் பெற்றுள்ளது.

நிகர வரி வசூலில் நிறுவன வரியில் 5.15 டிரில்லியன் மற்றும் தனிநபர் வருமான வரியில் 4.29 டிரில்லியன் பாதுகாப்பு பரிவர்த்தனை வரியும் அடங்கும்.