வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிய விதிமுறைகள்

*புதிய விதிமுறைகள்*

வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பயணிகளுக்கான திருத்தப்பட்ட விதிமுறைகள்… பலரது சந்தேகத்திற்கான பதில்….

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் இப்போது இந்தியா வந்தவுடன் ஒரு வாரத்திற்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 7 ம் தேதி வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் ஒரே வாரத்தில் ஐந்து மடங்கு உயர்ந்து நேற்று 1,59,632 கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளது .

புதிய அறிவிப்பின்படி அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் பயணிகள் ஏழு நாட்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்,மேலும் இந்தியா வந்த எட்டாவது நாளில் RT-PCR சோதனை எடுக்க வேண்டும்.

பின்னர் அந்த பரிசோதனையின் முடிவுகளை பயணிகள் ஏர் சுவிதா இணையதளத்தில்
பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அமைச்சகத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சோதனை முடிவு எதிர்மறையாக இருந்தால், அடுத்த ஏழு நாட்களுக்கு அவர்கள் தங்கள் உடல்நிலையை மேலும் சுயமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் அத்தகைய பயணிகள் நேர்மறை முடிவை பெற்றால் , அவர்களின் மாதிரிகள் INSACOG ஆய்வக நெட்வொர்க்கில் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட வேண்டும் .

அதேநேரம் புதிய விதிகளின்படி கொரோனா பாதிப்பின் அபாயம் அதிகம் உள்ள நாடுகள் என்று High Risk Countrie களா இந்திய அரசால் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் , கோவிட் பரிசோதனைக்கான மாதிரிகளை வந்து சேரும் விமான நிலையத்தில் வழங்க வேண்டும்.

பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகைக்கு முந்தைய மற்றும் பிந்தைய பரிசோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் அவர்களுக்கு நோய்க்கான அறிகுறிகள் அவர்கள் விமான நிலையம் வந்திறங்கிய போது அல்லது வீட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் போது கண்டறியப்பட்டால் , அவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வகுக்கப்பட்ட நெறிமுறையின்படி சிகிச்சை அளிக்கப்படும் எனவும் திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதலில் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது .