Whatsapp பயன்படுத்தும் நபர்களுக் புதிய பாதுகாப்பு முறைகள்..!

*Whatsapp*

வழக்கமான வாட்ஸ்அப் பயனர்கள் பல ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான செய்திகளை அனுப்பியிருக்கலாம். இது மிகவும் சாதாரணமான ஒன்றுதான் ஆனால் நீங்கள் அனுப்பிய பல உரைகளின் மாபெரும் பதிவு உள்ளது.

முக்கியமாக அந்த உரைகள் உங்கள் தொலைபேசியில் மட்டுமல்ல பியரின் கைபேசியிலும் உள்ளன. பழைய அரட்டைகளை சுத்தம் செய்ய உங்களை அனுமதிப்பதன் மூலம் தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போது இந்த அமைப்பைப் சரி செய்ய வேலை செய்கின்றனர்.

அனைத்து புதிய உரைகளையும் தானாக அழிக்க உங்களை அனுமதிக்கும் அம்சத்தை வாட்ஸ்அப் சமீபத்தில் சேர்த்தது. அமைப்பை மாற்றுவதற்கு முன்பு நீங்கள் ஏற்கனவே அனுப்பிய செய்திகளுக்கு இது வேலை செய்யாது. ஆனால் நீங்கள் தனிநபருக்கு அனுப்பும் புதிய உரைகள் ஒரு நாள் கழித்து தானாகவே நீக்கப்படும்.

ஏற்கனவே உள்ள உரையாடல்களை பாதிக்காமல் அனைத்து புதிய அரட்டைக்களுக்கும் தானாகவே இயக்கப்படும் மறைந்த செய்திகளை அமைக்கலாம். மறைந்து வரும் செய்திகளுக்கு 24மணி நேரம் மற்றும் 90 நாட்களுக்கு இரண்டு புதிய காலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

எனவே இப்போது நீங்கள் மொத்தம் 4 விருப்பங்களிள் இருந்து தேர்வு செய்யாமல் 24 மணி நேரம், 7 நாட்கள், 90 நாட்கள் அல்லது ஆஃப். “ஒரு செய்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை தீர்மானிப்பது உங்கள் கைகளில் இருக்க வேண்டும்” என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

Leave a Comment