அடுத்த க்ரைம் படம் ரெடி Dulquer ரசிகர்கள் கொண்டாட்டம்..!

*சல்யூட்*

துல்கர் சல்மான் தனது வரவிருக்கும் படமான “சல்யூட்” திரைப்படத்தின் புதிய போஸ்டரைப் பகிர்ந்துள்ளார். இப்படம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

அந்த போஸ்டரில் துல்கர் சல்மான் ஒரு தீவிர போலீஸ்காரராக இருக்கிறார். டார்ச்சைப் பிடித்தபடி ஒரு ஆவணத்தை ஆய்வு செய்யும் போசில் நடிகர் இருப்பது போல் தெரிகிறது.

ஆக்க்ஷன் திரில்லர் படமான சல்யூட்டை ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார். அதேசமயம் துல்கர் சல்மான் தனது Wayfarer பிலிம்ஸ் பேனர் கீழ் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் டயானா பெண்டி கதாநாயகியாக நடிக்கிறார் மற்றும் மனோஜ் கே.ஜெயன், சானியா ஐயப்பன், லட்சுமி கோபாலசாமி, சாய்குமார் மற்றும் கணபதி எஸ் போதுவால் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். அஸ்லாம் கே. புரையில் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கான பின்னணி இசையை ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ளார்.

நேற்று துல்கர் சல்மான் மாஸ்டர் பிருந்தா இயக்கிய Hey Sinamika திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் பகிர்ந்துள்ளார். இந்த ரொமாண்டிக் காமெடியில் நடிகைகள் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த Hey Sinamika திரைப்படம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி அன்று திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சல்மான் மற்றும் ஹைதாரி இருவரும் திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆன ஒரு ஜோடியை சுற்றி சுழலும் கதை பொருந்திய படம்.