‘அன்பறிவு’ காமெடிக்கு பஞ்சமே இல்லை 100%

*அன்பறிவு*

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த திரைப்படம் ‘அன்பறிவு‘. அஸ்வின் ராம் இயக்கத்தில் அன்பறிவு திரைப்படம் ஜனவரி 7-ம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக திரையிடப்படும். படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக தயாரிப்பாளர்கள் படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.

ஹிப்ஹாப் ஆதி முதன்முறையாக அன்பு அறிவு என இரு வேடங்களில் நடிக்கிறார். ஹிப்ஹாப் ஆதி முன்னதாக ‘சிவகுமாரின் சபதம்‘ திரைப்படத்தில் நடித்திருந்தார் இது இந்த ஆண்டு தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியானது. இருப்பினும் இப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து மந்தமான வரவேற்பை பெற்றது.

அன்பறிவு திரைப்படத்தை பற்றி பார்க்கும் பொழுது இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் டிஜி தியாகராஜன் தயாரித்துள்ளார், நெப்போலியன், ஊர்வசி, சாய்குமார், சிவானி ராஜசேகர், சங்கீதா கிரிஷ், மாரிமுத்து, தீனா, விதார்த், காஷ்மிரா மற்றும் ஆஷா சாரத் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.