நாஸ்தி பண்ணிட்டாங்க தல! நோ வே ஹோம் விமர்சனம்..?

*நோ வே ஹோம் விமர்சனம்*

டிசம்பர் 16ஆம் தேதி இந்தியாவில் வெளியான திரைப்படம் தான் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம். இப்படத்தை சோனி பிக்சர்ஸ் மற்றும் மர்வெல் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். டாம் ஹால்அண்ட், ஜெண்டயா, பெனடிக்ட் கம்பெர்பாட்ச் போன்ற மார்வல் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மார்வெல் ஸ்டுடியோஸ் இன்ஃபினிட்டி சாகா முடிந்து தற்போது மல்டிவெர்ஸ் என்னும் கான்செப்ட்டை நோக்கி செல்கிறது. ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் மார்வெல் ஸ்டுடியோஸின் Phase 4 Projects களிள் ஒன்றாகும்.

இப்படத்தின் கதை பற்றி பார்க்கும் பொழுது ஸ்பைடர் மேன் ஃபார் பிரேம் ஹோம் படத்தின் இறுதியில் மிஸ்டிரியோ பீட்டர் பார்க்கர் தான் ஸ்பைடர்மேன் என்று இந்த உலகிற்கு தெரியப்படுத்தி விடுவார் அதைத்தொடர்ந்து ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படம் தொடங்கும்.

மிஸ்டிரியோவை ஸ்பைடர்மேன் தான் கொன்றுவிட்டார் அவர்தான் பீட்டர் பார்க்கர் என்ற மக்கள் அனைவரும் அவருக்கு எதிராக இருப்பார்கள். இதனால் பீட்டர் பார்க்கருக்கு மட்டுமில்லாமல் அவருடைய நண்பர்களுக்கும் பிரச்சினை ஏற்பட தொடங்கிவிடும்.

இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று டாக்டர் ஸ்ட்ரேஞ்சிடம் நான்தான் ஸ்பைடர்மேன் என்று யாருக்கும் தெரியக்கூடாதப் படி செய்யுமாறு பீட்டர் பார்க்கர் உதவி கேட்பார். டாக்டர் ஸ்ட்ரேஞ்சும் அவருக்கு உதவி செய்வதற்காக ஒரு மந்திரத்தை போடுவார் அது தவறுதல் அடைந்து மல்டிவெர்ஸ் என்னும் பாதை திறந்து விடுகிறது.

இதனால் என்னென்ன பிரச்சனைகள் வருகிறது அதை எப்படி பீட்டர் பார்க்கர் எதிர்கொள்கிறார் என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

படத்தில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. படம் முழுவதும் ஆச்சரியமாகவும் உற்சாகமாகவும் இருக்கும். படத்தின் முதல் பாதியில் கேரக்டர்களை அறிமுகம் செய்வதற்காக திரைக்கதை சிறிது ஸ்லோவாக இருக்கும். படத்தின் இரண்டாம் பாதியில் உச்சகட்ட ஆச்சரியத்தையும் அடைவோம்.

நீங்கள் ஸ்பைடர்மேன் ரசிகனாக இதுவரை வந்த அனைத்து ஸ்பைடர்மேன் படங்களையும் பார்த்தவராக இருந்தால் இப்படம் உங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கும் என்பதில் சந்தேகமே இருக்காது.

மார்வெல் ஃபேன்ஸ் இப்படத்தை கொண்டாடுவார்கள். படத்தின் இறுதியில் அடுத்த படத்திற்கான கிரிடிட் சீன்கள் அமைந்துள்ளன.

படத்தின் ஹீரோ டாம் ஹொலண்ட் தனது மெச்சுரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இனி அவர் நடிக்கும் மார்வெல் படங்களில் டோனி ஸ்டார்க் (அயன் மேன்) அவரை இடத்தை பிடிப்பார் என்று கூறப்படுகிறது.

ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படத்திற்கான Rating 4.8/5