தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் ஒமிக்ரான் பதிப்பு..!

*ஒமிக்ரான்*

தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 1500 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 619 ஆக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை 1489 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 682 இரண்டுபேருக்கும், செங்கல்பட்டில் 168 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தோற்று பாதிப்புடன் 8,340 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் ஒரே நாளில் 611 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் புதிய வகை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது இதில் 64 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாதவர்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது தமிழ் நாட்டில் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.