அப்பாவுக்கு மக்கள் சப்போர்ட்.

*தப்பாக புரிந்து கொண்டுள்ளார்*

இசைவாணி தன் அப்பாவான இமான் அண்ணாச்சியை தப்பாக புரிந்து கொண்டுள்ளார் என மகள் வருத்தம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இல் போட்டியாளர்களாக இமான் அண்ணாச்சியும் கானா இசை வானியும் பங்கேற்று வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நேர்மையாக விளையாடி வருபவர் இமான் அண்ணாச்சி ஆவார். அவரைப்பற்றி அவரது மகள் ஜெஃபி ஷைனி கூறியுள்ளார்.

ஜெஃபி ஷைனி கூறுவது, கடந்த 4 சீசனாக அப்பாவ பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க,
நாங்க எல்லாரும் பிக்பாஸ் பார்ப்போம், அப்பாவை பிக் பாஸில் பாக்கணும்னு ஆசை அது எப்போ நிறைவேறியது. அப்பா எப்பவுமே கூல் டைப் எல்லாரோடையும் சகஜமாக பழகுவார். அப்பா வீட்டில் எப்படி இருப்பாரோ அதே மாதிரி தான் பிக் பாஸ் ஹவுஸ் ல இருக்காரு ஆனா இந்த ஹவுஸ் ல பல பேரு தப்பா பேசறாங்க அவர புரிஞ்சுக்க மாட்ராங்க.

அப்பாவுக்கு மக்கள் சப்போர்ட் எப்பவுமே இருக்கணும்னு நாங்க நம்புறோம். அவர் எப்போதுமே மனசுல பட்டத மூஞ்சிக்கு நேரா சொல்லிடுவாரு. அவருக்கு பின்னாடி பேசுற பழக்கம் இல்லை.

அப்பா இசைவாணி அக்காவுடைய நல்லதுக்கு தான் ஒரு விஷயம் சொன்னாங்க ஆனா அதை அந்த அக்கா தப்பா எடுத்துகிட்டாங்க அதனாலதான் அவுங்க இரண்டு பேருக்கும் நடுவுல பிரச்சனை வருது.

அப்பாவுக்கும் ராஜூ அண்ணாவுக்கும் ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் இருக்கிறது. ராஜு அண்ணா மத்தவங்கள ஹர்ட் பண்ணாமல் கலாய்ப்பாரு அது ரொம்பவே நல்லா இருக்கும்.

பிசிக்கலாவே அப்பா ரொம்ப போல்ட் அண்ட் ஸ்ட்ராங்கா இருப்பாரு இதெல்லாம் பிசிகல் டாஸ்க் வரும்போது எல்லாத்துக்கும் தெரியும்.

எனக்கு பிறந்தநாள் அடுத்த வாரம் வருது. இந்த பிறந்தநாளில் அப்பாவ ரொம்ப மிஸ் பண்றேன். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வர அப்போ ஃபிட்டா வரவேணும் சொன்னார் அப்பா.