ஒரு ரூபாய்க்கு பெட்ரோல் ஆ..?

*ஒரு ரூபாய்க்கு பெட்ரோல்*

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் பொருளாதார ரீதியான ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். இந்தியாவில் தற்போது ரூபாய் 100 க்கு மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதை இந்திய மக்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்று புரியவில்லை.

இந்த உலகத்திலேயே ஏழு இடங்களில் மிகவும் குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கும். அந்த ஏழு இடங்களை இந்தப் பட்டியலில் பார்ப்போம்:

7.கத்தார்

கத்தார் ஒரு அரபிய நாடு இங்கே நிறைய இந்தியர்களும் பணிபுரிகிறார்கள். இங்கு 1 லிட்டர் பெட்ரோலின் விலை இந்திய மதிப்பின்படி ரூபாய் 29.89பைசா.

6.கஜகஸ்தான்

இது ஒரு இஸ்லாமிய நாடு. இங்கு 1 லிட்டர் பெட்ரோலின் விலை இந்திய மதிப்பின்படி ரூபாய் 29.68பைசா.

5.குவைத்

இதுவும் ஒரு அரபிய நாடு. இந்த நாட்டில் 1 லிட்டர் பெட்ரோலின் விலை இந்திய மதிப்பின்படி ரூபாய் 25.13பைசா.

4.அல்ஜீரியா

அல்ஜீரியா ஒரு இஸ்லாமிய நாடு இது மேற்கு ஆபிரிக்கா கண்டத்தில் உள்ளது. இங்கு 1 லிட்டர் பெட்ரோலின் விலை இந்திய மதிப்பின்படி ரூபாய் 25.

3.அங்கோலா

இது ஒரு கிறிஸ்துவ நாடு இங்கு ரோமன் கத்தோலிக்கை பின்பற்றக்கூடிய கிறிஸ்தவ அமைப்புகள் பெரும்பானவை. இங்கு 1 லிட்டர் பெட்ரோலின் விலை இந்திய மதிப்பின்படி ரூபாய் 17.73பைசா.

2.ஈரான்

ஈரான் ஒரு இஸ்லாமிய நாடு. இங்கு 1 லிட்டர் பெட்ரோலின் விலை இந்திய மதிப்பின்படி ரூபாய் 4.24 பைசா.

இதை நீங்கள் இவ்வளவு ஆச்சரியமாக பார்க்கலாம் இதைவிட குறைவாக ஒரு நாடு 1 லிட்டர் பெட்ரோலை வழங்குகிறது.

1.வெனிசுலா

இந்தப் பட்டியலில் வெனிசுலா விற்கு தான் முதலிடம். இதுவும் ஒரு கிறிஸ்துவ நாடு இங்கு ரோமன் கத்தோலிக்கை பின்பற்றக்கூடிய கிறிஸ்தவ அமைப்புகள் பெரும்பானவை. இங்கு 1 லிட்டர் பெட்ரோலின் விலை இந்திய மதிப்பின்படி ரூபாய் 1.46பைசா.