மீண்டும் உயரும் PETROL விலை !? Petrol Rate !!

Petrol Rate !!

பெட்ரோல் என்ற ஒரு ஆயில் எல்லாக் காலங்களிலும் தேவைப்படும் ஒன்றாகவே உள்ளது என்றுதான் கூற வேண்டும். மேலும் நமது தேவையை அறிந்து கொண்ட சில பேராசைக்காரர்கள் அதை அஊஇக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் இந்த பதவில் மீண்டும் மீண்டும் உயரும் பெட்ரோல் பற்றியும் !! ஏன் பெட்ரோல் உயருகிறது என்பது பற்றியும் !! உலக நாடுகளில் பெட்ரோல் விலை பற்றியும் !! பெட்ரோலிற்கு மாற்றாக இருக்கும் தீர்வுகள் பற்றியும் முழுவதுமாக பார்ப்போம். நீங்கள் இவற்றை முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முழுவதுமாக படியுங்கள்.

Read More :- இன்னும் நிங்க Cryptocurrency நம்புறீங்கால இதை படியுங்கள்.!!

பெட்ரோல் :-

பெட்ரோல் என்ற ஒன்று நான் முதலில் கூறியது போல எல்லாக் காலங்களிலும் தேவைப்படும் ஒரு பொருள் ஆகும். இது அனைத்து நாடுகளிலும் கிடைப்பது இல்லை.

பெட்ரோல் என்றால் நேரடியாக பூமியில் இருந்து கிடைப்பது இல்லை. மாறாக கச்சா எண்ணெய் என்று அழைக்கப்படும் எண்ணெய்யில் இருந்து பிரித்து எடுக்கப்படுவதுதான் பெட்ரோல் ஆகும்.

பெட்ரோல் மட்டுமின்றி பெட்ரோலுடன் சேர்த்து, டீசலும் கச்சா எண்ணெய்யில் இருந்து பிரித்து எடுப்பதுதான். அத்துடன் கச்சா எண்ணெயின் கடைசி பொருள்தான் மண்ணெண்ணெய் என்று அழைக்கப்படும் எண்ணெய் ஆகும். இதை ஆங்கிலத்தில் Kerosene என்று அழைக்கப்பார்கள்.

குறிப்பாக ஐக்கிய அரேபிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் இந்த பெட்ரோல் அதிகமாக கிடைக்கிறது என்று கூறலாம். மேலும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த பெட்ரோல் கிடைப்பது இல்லை.

அவ்வாறாக ஒரு சில வளைகுடா நாடுகளிலும் மற்றும் அரேபிய நாடுகளிலும் இருந்து எடுக்கப்படடும் இந்த கச்சா எண்ணெய் பெட்ரோல் மற்றும் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவைகளாக பிரித்து எடுக்கப்படுகிறது.

பின்னர் அவர்களின் தேவைக்குப் போக மீதி இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல்களை கப்பல் வழியாக ஏற்றுமதி அதாவது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள்.

அவ்வாறு ஏற்றுமதி செய்யப்படுவதுதான் இந்த பெட்ரோல் ஆகும். இந்த பெட்ரோலைத்தான் நாம் அதிக அளவில் பணத்தை கொடுத்து வாங்கி பயண்படுத்தி வருகிறோம் என்று கூறலாம்.

மேலும் இந்திய,இலங்கை போன்ற நாடுகள் பெரும்பாலும் பெட்ரோலை இறக்குமதி செய்யும் நாடுகள் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்திய பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும்.

நீங்கள் இங்கு புரிந்து கொள்ள வேண்டும் அதாவது பெட்ரோல் வேறு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் என்பது வேறு என்பதை. இந்தியா பெட்ரோலியத்தை அனுப்புவது இல்லை மாறாக பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது.

பெட்ரோல் எவ்வாறு உருவாகிறது ?

நான் முதலில் கூறியது போல பெட்ரோல் என்ற ஒன்றாக உருவாவது இல்லை மாறாக கச்சா எண்ணெயாக உருவாகிறது. அதில் இருந்து பிரித்து எடுப்பதுதான் பெட்ரோல் ஆகும். இப்போது அந்த கச்சா எண்ணெய் எவ்வாறு உருவாகிறது என்று பார்ப்போம்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கால மாற்றத்தால் இறந்து,புதைந்து போன விலங்குகள் மற்றும் தாவரங்களே மக்கிய பிறகு இவ்வாறு கச்சா எண்ணெயாக உருவாகிறது.

இந்த செயல் நடப்பது என்பது இன்று உடனே நடந்து விடுவது இல்லை. மாறாக பல நூற்றாண்டுகள் தேவைப்படும் என்கிறார்கள்.

அதாவது தாவரங்கள் மற்றும் விலங்குகள் இறந்து போய்விட்டாலும் இவ்வாறு பெட்ரோல் உருவாவதற்கு பல ஆயிரக்கணக்கான வருடங்கள் தேவைப்படும் என்கிறார்கள்.

பெட்ரோல் தீர்ந்து போகுமா ?

பெட்ரோல் தீர்ந்து போகுமா என்று கேட்டால் ? நிச்சயமாக பெட்ரோல் தீர்ந்து போகக்கூய ஒன்றுதான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று கூறலாம்.

ஏனெனில் பெட்ரோல் என்பது ஒரு புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளம் ஆகும். பல ஆயிரக்கணக்கான வருடங்களா நாம் பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்தும்போது அது தீர்ந்து போகும் என்கிறார்கள்.

மேலும் அது இன்றோ அல்லது நாளைக்கோ தீர்ந்து போகுமா என்றால் நிச்சயமாக இல்லை. வரும் காலத்தில் தீர்ந்து போகும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கிறது என்று தெரிகிறது.

பெட்ரோலை மீண்டும் உருவாக்க முடியுமா ?

பெட்ரோலை மீண்டும் உருவாக்க முடியுமா‌ ? என்றால் முடியாது என்று தான் கூற வேண்டும்.

ஏனெனில் பெட்ரோல் ஒன்றும் மனிதர்களால் செயற்கையாக உற்பத்தி செய்த பொருள் இல்லை. மாறாக பல ஆண்டுகளாக இயற்கையால் உருவான ஒரு அரிய அதிசியம் தான் பெட்ரோல் ஆகும்.

ஆகவே அதை மீண்டும் உருவாக்கம் செய்வது என்பது சாத்தியமில்லை என்று கூறலாம். மேலும் இப்போது நடக்கும் கால சூழ்நிலையில் மீண்டும் இறந்த விலங்குகள் மற்றும் தாவரங்கள் சேர்ந்து மக்கினால் ஒரு வேலை அதுபோன்ற பெட்ரோல் கிடைக்கும்.

ஏன் பெட்ரோல் உயருகிறது ?

தற்போது பெட்ரோல் விலை என்பது இந்தியாவில் குறைந்து உள்ளது என்று கூறலாம். அதாவது கடந்த ஒரு சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் விலை என்பது சற்று குறைவாகவே உள்ளது.

அதாவது மற்ற நாட்களின் பெட்ரோல் விலையை காட்டிலும் கடந்த ஒரு சில நாட்களின் பெட்ரோல் விலை என்பது குறைந்து உள்ளது என்று கூறலாம். ஆனால் மீண்டும் பெட்ரோல் உடைய விலை என்பது அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஏன் பெட்ரோல் விலை உயரும் ? அதற்கான காரணம் இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் நட்டத்தில் இயங்கி வருகிறதாம். மேலும் ஒரு சில நாட்களில் மீண்டும் விலை அதிகரிக்கும் என்கின்றனர்.

இதற்கு முக்கியமான காரணம் என்று நாம் உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகளை கூறலாம். இதன் காரணமாக பெட்ரோல் உடைய விலை உயருகிறது என்பது தெரிகிறது.

மேலும் இந்தியா இந்த பிரச்சினையை சரி செய்ய 13 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடன் வாங்க திட்டம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தொகையை இந்தியா வெளி நாடுகளில் வாங்காது என்றும் உள்நாட்டில் வாங்கும் என்றும் கூறப்படுகிறது.

அதாவது வங்கிகளில் வாங்கலாம் என்றும் அல்லது இந்திய ரிசர்வ் வங்கியிடம் இந்த தொகையை வாங்கலாம் என்றும் தெரிகிறது. மேலும் இதனால் இன்னும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்கின்றனர்.

மீண்டும் இந்தியாவில் இதனால் பெட்ரோல் விலை உயரும் என்று தெரிகிறது. மேலும் பெட்ரோல் விலை மட்டுமன்றி அத்துடன் கூடவே பொருட்களின் விலைவாசியும் ஏறும் என்று தெரிகிறது.

உலக அளவில் பெட்ரோல் உடைய விலை !! Petrol Rate !! :-

இப்போது நாம் இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் பெட்ரோல் உடைய விலை என்ன என்பதை பார்க்கலாம். மேலும் இந்தியாவின் விலையையும் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போதைய பெட்ரோல் விலை என்பது 1 லிட்டருக்கு ₹102 ஆகும். மேலும் அமெரிக்கா டாலர்களின் மதிப்பில் 1 லிட்டருக்கு $1.34 ஆகும்.

ஆஸ்திரேலியாவில் தற்போதைய பெட்ரோல் விலை என்பது 1 லிட்டருக்கு ₹103 ஆகும். மேலும் அமெரிக்கா டாலர்களின் மதிப்பில் 1 லிட்டருக்கு $1.35 ஆகும்.

சீனாவில் தற்போதைய பெட்ரோல் விலை என்பது 1 லிட்டருக்கு ₹105 ஆகும். மேலும் அமெரிக்கா டாலர்களின் மதிப்பில் 1 லிட்டருக்கு $1.37 ஆகும்.

United Kingdom என்று அழைக்கப்படும் இங்கிலாந்தில் தற்போதைய பெட்ரோல் விலை என்பது 1 லிட்டருக்கு ₹157 ஆகும். மேலும் அமெரிக்கா டாலர்களின் மதிப்பில் 1 லிட்டருக்கு $2.04 ஆகும்.

சிங்கப்பூரில் தற்போதைய பெட்ரோல் விலை என்பது 1 லிட்டருக்கு ₹169 ஆகும். மேலும் அமெரிக்கா டாலர்களின் மதிப்பில் 1 லிட்டருக்கு $2.19 ஆகும்.

ஜெர்மனியில் தற்போதைய பெட்ரோல் விலை என்பது 1 லிட்டருக்கு ₹218 ஆகும். மேலும் அமெரிக்கா டாலர்களின் மதிப்பில் 1 லிட்டருக்கு $2.83 ஆகும்.

டென்மார்க்கில் தற்போதைய பெட்ரோல் விலை என்பது 1 லிட்டருக்கு ₹185 ஆகும். மேலும் அமெரிக்கா டாலர்களின் மதிப்பில் 1 லிட்டருக்கு $2.40 ஆகும்.

ஹாங் காங் தற்போதைய பெட்ரோல் விலை என்பது 1 லிட்டருக்கு ₹169 ஆகும். மேலும் அமெரிக்கா டாலர்களின் மதிப்பில் 1 லிட்டருக்கு $2.19 ஆகும்.

குவைத் தற்போதைய பெட்ரோல் விலை என்பது 1 லிட்டருக்கு ₹27 ஆகும். மேலும் அமெரிக்கா டாலர்களின் மதிப்பில் 1 லிட்டருக்கு $0.35 ஆகும்.

வெனிசுலா தற்போதைய பெட்ரோல் விலை என்பது 1 லிட்டருக்கு ₹2 ஆகும். மேலும் அமெரிக்கா டாலர்களின் மதிப்பில் 1 லிட்டருக்கு $0.03 ஆகும்.

பெட்ரோலுக்கு மாற்றாக இருக்கும் தீர்வுகள் :-

நீங்கள் பெட்ரோலுக்கு ஒரே தீர்வு வேண்டும் என்றால் நிச்சயமாக எலக்ட்ரிக் பைக் பக்கம் செல்லலாம். அது வரும் காலத்தில் நல்ல வரவேற்பை பெறும் மக்களிடயே எனவே நீங்கள் அதை இப்போதே செய்யலாம்.

மேலும் நீங்கள் பைக் வாங்கினாலும் உங்கள் சுற்றளவில் 200 கிலோ மீட்டர் அல்லது அதற்கு உள்ளே மட்டுமே செல்ல போகிறீர்கள். எனவே அதற்கு எலக்ட்ரிக் பைக் போதுமானது என்று கூறுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

மீண்டும் உயரும் PETROL விலை !? Petrol Rate !!