நடிகை ரோஜாவிற்கு விமான விபத்தா..?

*ரோஜாவிற்கு விமான விபத்தா*

தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வலம்வந்தவர் நடிகை ரோஜா. நடிகை ரோஜா தற்போது அரசியலில் நுழைந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக வலம் வருகிறார். ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் நம்பிக்கைக்குரிய ஒருவராகவும் திகழ்கிறார்.

பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை ரோஜா ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி சென்ற விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது விமானத்தில் ஏதோ ஒரு திடீர் கோளாறு ஏற்பட்டதாக தெரியவந்தது. இருப்பினும் விமானம் உடனடியாக எப்போதும்போல் செயல்பட்டதால் விபத்தில் இருந்து விமானம் தப்பியது.

*நடிகை ரோஜா*

திடீர் கோளாறு காரணமாக தங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் திருப்பதியில் இருந்து பெங்களூர் செல்வதற்கு மாற்று வழியில் விமானம் கொண்டு செல்லப்பட்டதால் விபத்திலிருந்து தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் அதிர்ஷ்டவசமாக நடிகை ரோஜா உள்ளிட்ட பயணிகள் பலர் உயிர் தப்பியுள்ளனர்.