பேய் பயத்தில் தற்கொலை செய்து கொண்ட போலீசார்..?

*பேய் பயத்தில் போலீசார் தற்கொலை*

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்னும் பழமொழி போல கடலூரில் ஒரு திகில் சம்பவம் அரங்கேறி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். கடலூர் ஆயுதப்படை போலீசில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி விஷ்ணுபிரியா என்னும் மனைவியும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளன.

பிரபாகரன் கடலூரில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். திங்கட்கிழமை மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தன் மனைவி விஷ்ணுபிரியா வையும் மற்றும் தனது இரு குழந்தைகளையும் அனுப்பி வைத்துவிட்டு தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

விஷ்ணு பிரியா திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது கணவர் பிரபாகரன் தூக்கில் தொங்கி சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரபாகரனை தூக்கிக் கொண்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

தகவலை அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் பிரபாகரன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

பிரபாகரனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபாகரனின் கனவில் தீயில் எரிந்த ஒரு பெண் கரு கரு முகத்துடன் ஆக்ரோசமாக வந்து தன்னை போட்டு அமுக்குவது ஆகவும் கழுத்தை நெரிப்பதாகவும் கூறி வந்துள்ளார்.

இதனால் தனக்கு பேய் பிடித்திருக்கலாம் என்று நினைத்த பிரபாகரன் அதற்காக குறி சொல்பவர்களை பார்த்து மந்திரித்து உள்ளார். முனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று தாயத்தை மந்திரித்து தன்கையில் அணிந்திருந்தார்.

பேய் பீதியால் பிரபாகரன் பணிக்குச் செல்ல பயந்து 15 நாட்கள் மருத்துவவிடுத்தி எடுத்துக்கொண்டு வீட்டின் உள்ளே உள்ள பூஜை அறையில் பதுங்கி இருந்துள்ளார்.

பிறகு ஓரளவு பயம் நீங்கியதால் 15 நாள் விடுப்பு முடிந்து பணிக்குச் சென்ற பிரபாகரனுக்கு மீண்டும் கனவில் அந்தப் பெண் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண்ணிற்கு பயந்து பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபாகரனின் மரணத்திற்கு பணிச்சுமையோ வேலை அழுத்தமோ காரணமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை எனக் கூறும் சக போலீசார் முப்பொழுதும் இருட்டை கண்டு அஞ்சி நடுங்கி கொண்டிருந்ததோடு பேய் குறித்த பயம் மட்டுமே காரணம் என்று தெரிவித்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இதே காவலர் குடியிருப்பில் ஒரு பெண் மன்னனை ஊற்றிக்கொண்டு உயிரை மாய்த்த பெண் பேயாக வந்து தனக்கு மரண பயத்தை காட்டி விட்டதாக போலீசார் கூறிய நிலையில் பிரபாகரன் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது அவர் குடும்பத்தை மட்டுமல்லாமல் கடலூர் காவல் குடியிருப்பில் உள்ள மற்ற போலீசாரின் குடும்பங்களையும் கலங்க வைத்துள்ளது.