வில்லனாக மாறிய பிரபு..!

*வெங்கட்பிரபு*

சென்னை 28 மற்றும் மங்காத்தா போன்ற படங்களை கொடுத்து மாஸ் காட்டியவர் வெங்கட்பிரபு. சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் தான் இவருக்கான பெயரை திரும்பப் பெற்று தந்துள்ளது.

மாநாடு திரைப்படம் அனைவராலும் புகழப்பட்டு வருகிறது அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது வெங்கட் பிரபு தனது அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பித்துவிட்டார். அந்தப்படத்தை படி ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மற்றும் வெங்கட் பிரபுவின் பிளாக்டிக்கெட் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றது.

நடிகர் அசோக்செல்வன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் மற்றும் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் என மூன்று நடிகைகள் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர். இது ஒரு காமெடி கலந்த வித்தியாசமான காதல் கதையாகும் அதுமட்டுமில்லாமல் வெங்கட் பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தில் வில்லனாக நடிக்க கயல் சந்திரனை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். கயல் சந்திரன் கயல் படத்திற்குப் பிறகு இப்படத்தில் நான் நடிக்க உள்ளார். மாநாடு படத்தில் வில்லனாக நடித்த எஸ்ஜே சூர்யாவை ரசிகர்கள் பெரிதும் ரசித்தனர். அதேபோல் இப்படத்திலும் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் கயல் சந்திரன் நடிக்க உள்ளார்.

இந்தத் திரைப்படம் முற்றிலுமாக இளைஞர்களுக்கான திரைப்படம் என்று கூறப்படுகிறது. மாநாடு திரைப்படம் வெற்றி பெற்றதை பிறகு வெங்கட்பிரபுவின் அடுத்த படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.