பிரியங்காவை பாக்க பிடிக்கல பிரவீன்..!

*பிரவீன்*

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் ரசிகர்களின் ஏராளமான ஆதரவைப் பெற்றவர் விஜய் டிவியின் தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே.

கடந்த 2016ம் ஆண்டு விஜய் டிவியின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பிரவினை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பிரியங்கா. இப்படி காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரியங்கா தனது கணவர் பற்றியும் தனது காதல் பற்றியும் இதுவரை எங்குமே ஏன் பேசவில்லை என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதைப் பற்றி சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வந்தனர். 2016ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் தற்போது இரண்டு வருடங்களாக பிரியங்கா தன் அம்மா மற்றும் தம்பியுடன் தான் இருந்து வருகிறார். பிரியங்காவின் கணவர் பிரவீன் தனியாகத்தான் வசித்து வருகிறார் என்ற தகவல் வந்துள்ளது.

இதையடுத்து சிலர் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள் என்று கூறிவந்தனர். ஆனால் பிரியங்கா கடந்த ஆண்டு ஒரு பேட்டியில், நான் என் அம்மா கூட தான் இருக்கிறேன் என் கணவர் பிரவீன் தான், எங்களுக்கு விவாகரத்து ஆகவில்லை, தானும் என் கணவரும் சின்னத்திரையில் பிஸியாக இருப்பதால் இருவரும் சேர்ந்து வசிக்க முடியவில்லை ஆனாலும் இருவரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம் என்று திட்டவட்டமாகக் கூறினார்.

இந்நிலையில் கடந்த பிக்பாஸ் சீசனில் அர்ச்சனா செய்ததை பிரியங்கா இந்த சீசனின் செய்து வருகிறார். பிரியங்காவின் கேம்மால் பிக்பாஸ் வீட்டின் ஒற்றுமை உடைய ஆரம்பித்தது. இதனால் பிரியங்காவின் இமேஜ் டேமேஜ் ஆனது.

கடந்த வாரம் பிக்பாஸில் Freez டாஸ்க் நடந்தது இதில் பிரியங்காவின் அம்மா மற்றும் தம்பி பிரியங்காவை பார்க்க வந்தனர். இது ஒருபுறமிருக்க பிரியங்காவின் கணவர் ஏன் வரவில்லை, ஏன் பிரியங்கா தன் கணவரைப் பற்றி ஒரு இடத்தில் கூட பேசவில்லை என்று எல்லோருக்கும் ஒரு கேள்வி எழும்பியது.

தற்போது பிரியங்கா பிரவீன் இருவருக்கிடையே என்ன பிரச்சனை என்று தெரிந்துவிட்டது. அதாவது பிரவீனை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருமாறு விஜய் டிவி கூறியுள்ளதாகவும் ஆனால் பிரவீன் அதை மறுத்து விட்டார், தான் பிரியங்காவை பார்க்க விருப்பமில்லை என்றும் கூறிவிட்டதாகவும் தகவல் அளித்துள்ளனர். இதற்கு காரணம் பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா எடுத்த கெட்ட பெயர் தான் என்று கூறி வறுகிறார்கள்.