CWC சீசன் 3 இல் புகழ் இருக்கிறார்..?

*CWC சீசன் 3*

Chef தாமு குக் வித் கோமாளி சீசன் 3இல் புகழ் வருவாரா இல்லையா என்பது பற்றி கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

முதல் சீசனை விட இரண்டாவது சீசன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கான முழு காரணம் இந்த நிகழ்ச்சியில் உள்ள கோமாளிகள் தான். அவர்கள் செய்யும் கோமாளித்தனமான விஷயங்கள் மக்களால் ரசிக்கப்பட்டு வந்தது.

இதுவரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியில் இதுவே டிஆர்பியில் நம்பர் 1 இடத்தை பிடித்தது. ஊரடங்கு காலத்தில் இந்த நிகழ்ச்சி பலருக்கு ஒரு மன நிம்மதியை தந்தது.

குக் வித் கோமாளி சீசன் 2 முடிந்த பிறகு சீசன் 3யை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது சீசன் 3 வரப்போவதாக அதிகாரபூர்வமான தகவல் வந்துள்ளது. இதற்கான ஒரு புரோமோவும் வெளியானது அதில் இந்த நிகழ்ச்சியின் கோமாளியான புகழ் இல்லை இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது இந்த நிகழ்ச்சியின் Chef தாமுவிடம் ஒரு ரசிகர் புகழ் இந்த நிகழ்ச்சியில் இருக்கிறாரா Please சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு தாமு “குக் வித் கோமாளியில் கண்டிப்பாக புகழ் இருப்பார். 100% இது உண்மை” என்று பதில் கூறியுள்ளார். இதனால் புகழின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment