கேரளா பெண்ணை திருமணம் செய்ய போற புகழ்

*புகழ் திருமணம்*

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழ் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததால் பல திரைப்பட வாய்ப்புகள் இவரைத் தேடி வந்து கொண்டிருக்கிறது.

இப்போது சின்னத்திரையை விட்டு வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார் புகழ். இந்நிலையில் புகழ் அவரது வருங்கால மனைவியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு “பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்ட்னர், லவ் யூ” என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை பார்த்த புகழின் ரசிகர்கள் எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் “எப்போ மாமா கேரளா பொண்ண கரெக்ட் பண்ண” என்று தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 இந்த வாரம் சனிக்கிழமை விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இதில் புகழ் பங்கேற்பாரா என்பது பற்றி இன்னும் தகவல் தெரியவில்லை.