தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5க்கு ரவி Re Entry..?

*தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5*

தெலுங்கு தொகுப்பாளர் ரவி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதில் பல்வேறு காரணங்களால் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகிறார்.

அவரை அநியாயமாக நீக்கியதாக கண்டித்து ரவி ரசிகர்கள் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடத்தி ரவி ரசிகர்களும் பிக்பாஸ் பார்வையாளர்களும் அவரை மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைத்து வர வேண்டும் என்று Star Maaவிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களை விட ரவி தான் மிகவும் தகுதியான போட்டியாளர் என்று கூறி வருகின்றனர்.

ரவியை மீண்டும் பிக்பாஸில் அழைத்து வருமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ரவி ரசிகர்கள் அவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்து வருவதால் தொகுப்பாளர் ரவியை மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைத்து வர Star Maa திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வார இறுதியில் ரவி பிக்பாஸ் வீட்டிற்கு வர வாய்ப்புள்ளது. இருப்பினும் இதைப்பற்றிய தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தவில்லை ரவியும் இதைப் பற்றி பேசவில்லை. பொதுவாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களை ஊடகங்கள் பேட்டி எடுப்பது வழக்கம்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று காத்திருந்து பொறுமையாக பார்ப்போம்.