வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

*வலிமை*

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் ஹச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை. இப்படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷி, வில்லனாக கார்த்திகேயா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

வலிமை திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மூன்று மொழிகளில் வலிமை திரைப்படம் உருவாகி உள்ளது. ஜனவரி 13ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு படம் வெளியாவதாக இருந்தது ஆனால் கொரோனா பரவலின் காரணமாக படத்தை தள்ளி வைப்பதாக தயாரிப்பு குழு முடிவு செய்தது.

படம் தள்ளிப் போடப்பட்டதால் அஜித் குமாரின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இன்னும் வலிமை திரைப்படத்தின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்படவில்லை. தற்போது வலிமை திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் வெளியாகும் என தகவல் கூறுகிறது.

தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக காத்திருந்த வலிமை திரைப்படத்தை பீஸ்ட் திரைப்படத்திற்கு முன்னரே வெளியிடப்போவதாக தகவல்கள் வந்துள்ளது.