ரிஷிபீடியா | இப்படிதான் உருவாச்சா..?

*ரிஷிபீடியா*

ரிஷிபீடியா வின் இயற்பெயர் லோகேஷ் ரிஷி குமார். இவர் இருபத்தி எட்டாம் தேதி மே மாதம் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் பிறந்தார். ரிஷி ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் படிப்பை முடித்தார். இவர் சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். இவர் நடிப்பு வாய்ப்பைத் தேடி பல இடங்களில் அடைந்துள்ளார்.

இவர் கல்லூரி காலங்களில் இவருக்கு நடிப்பு ஆர்வம் அதிகமாக இருந்தது அதற்காக இவர் ஒரு குறும் படத்தை இயக்கினார் அக் குறும்படத்தை காட்சி ஆகும் நேரத்தில் பலரும் ரிஷியை ஏளனமாக சிரித்தனர்.

அதனால் இவருக்கு நடிப்பு ஆர்வம் மிகவும் குறைந்தது. அதன்பின்னர் இவருக்கு கிடைத்த வேலையை வைத்தே. இவரது செலவை சமாளித்துள்ளார். ஆனால் எதுவும் சரியாக இல்லாத காரணத்தினால். இவர் தொடங்கிய யூடியூப் சேனலே ரிஷி பீடியா ஆகும் இவருக்கு இப்பொழுது 2.8 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். தமிழில் யூட்யூப் சமூகத்தில் அதிகம் சம்பாதிக்கும் யூடியூபர்கள் வரிசையில் ரிஷியும் உள்ளார்.

*ரிஷிபீடியா வாழ்க்கையில் நடந்த*

ரிஷி ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததனால் பல இடங்களில் வாய்ப்புக்காக அலைந்து உள்ளார். அதன் பின்னர் எதுவும் சரி வராத காரணத்தினால் ஸ்விக்கி உணவு விநியோகம் செய்யும் வேலையை செய்து வருகிறார்.

அதன் பின்னர் ஒருநாள் ஐடி கம்பெனியில் ஒரு விநியோகம் வேலை வருகிறது அங்கு சென்று பார்க்கையில் அது அவருக்கு தெரிந்த பெண்மணி ஆகும். வினியோகம் செய்யும் வேலையை அசிங்கமாக எண்ணிய ரிஷி தன் முகத்தை அவரது கை துணியால் மறைத்துக் கொள்கிறார். அதைக் கண்ட ஒருவர் இந்த வேலையை அசிங்கமாக எண்ணுகிறாயோ இது கூட உனக்கு கிடைத்ததெல்லாம் பெரிய விஷயம் என்று கூறி அவரை அவமானப்படுத்தி உள்ளார்.

அவமானத்தில் கலங்கிய ரிஷி அந்த வேலையை விட்டுவிட்டு தொடங்கிய யூடியூப் சேனல் தான் ரிஷி பீடியா ஆகும். இப்பொழுது அவருக்கு 2.8 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். தன்னை அசிங்கப்படுத்தி அவர்களை தன் வெற்றியால் ரிஷி பீடியா வாயடைத்துப் போகச் செய்தார்.

இவரது யூடியூப் சேனலில் சிறப்பம்சம் இவருக்கு பிடித்தால்தான் அந்த வீடியோவை இவர் பதிவு செய்வார் அதற்கு காரணம் இவருக்கு பிடிக்காத வீடியோக்கள் மற்றவர்களுக்கு எப்படி பிடிக்கும் என்ற எண்ணம்தான். இவ்வாறு இவர் பார்த்து பார்த்து செதுக்கிய ரிஷி பீடியா தமிழ் யூடியூப் சமூகத்தில் ஒரு பெரிய யூடியூப் சேனல் ஆக கருதப்படுகிறது.

இவரது வீடியோக்கள் அனைத்தும் குறைந்தது பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கிறது இவரது வீடியோக்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சுவாரசியமான பல வீடியோக்களை இவர் பதிவு செய்து உள்ளார்.

தோல்வியை கண்டு அஞ்சாமல் அதனை கண்டு எதிர்த்து ஓடியது நாளிலேயே ரிஷி ஒரு நல்ல இடத்தை அடைந்துள்ளார்.