RRR படத்தை ஃபோன்ல பாத்தலே செம்மையாக இருக்கும் SK..!

*RRR*

தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி. பிரம்மாண்ட படமான பாகுபலிக்கு பிறகு தற்போது அடுத்து ஒரு பிரம்மாண்ட RRR படத்தை படைத்துள்ளார். இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளனர்.

RRR படத்தின் ட்ரெய்லரை பார்த்த அனைவரும் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது என்றும் பிரம்மித்தனர். இதனால் இப்படம் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

வரும் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இது தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் போன்ற ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று சென்னையில் இப்படத்திற்கான Pre Release Event நடைபெற்றது இதில் தமிழ் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் முதலில் இயக்குனர் ராஜமௌலி பற்றி பேசினார். ராஜமௌலி தனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன், உங்க படங்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன், உங்க பெரிய ஃபேன் என்று கூறினார்.

அதன் பிறகு படத்தின் ஹீரோக்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் பற்றி புகழ்ந்து பேசினார். அதுமட்டுமில்லாமல் படத்தில் பெரும் உழைப்பு போட்டிருக்கின்றனர் அதை ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது.

அதற்க்கடுத்து இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு மிகவும் நன்றி தெரிவித்தார். அடுத்த வருடம் தொடக்கத்திலேயே மிகப்பெரிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன RRR அதற்கு அடுத்ததாக அஜித் சாரின் வலிமை திரைப்படம் என்று கூறினார்.

RRR திரைப்படம் பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருக்கும் எல்லோரும் தியேட்டரில் வந்து படத்தை பாருங்கள் என்று கூறி உரையை முடித்துக் கொண்டார்.