RRR படத்தின் ரிலீஸ் Update

*RRR*

தெலுங்கு சினிமாவின் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் RRR. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் கதாநாயகன்களாக நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பாட், சமுத்திரக்கனி போன்ற துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். DVV எண்டர்டெயின்மெண்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

RRR திரைப்படம் சுதந்திர போராட்டத்தின் போது இந்தியர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஒரு கதை கதைக்களமாக அமைந்துள்ளது. இப்படம் கடந்த ஜனவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஆரம்பித்ததால் படத்தை வெளியீடாமல் தள்ளிவைத்தனர்.

கடந்த ஒரு வருடங்களாக RRR திரைப்படம் வெளியாகமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இதனால் ரசிகர்கள் மிகவும் சோகம் அடைந்தனர். தற்போது படக்குழு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தியை கூறியுள்ளனர்.

நாட்டில் தொற்றுநோய் நிலைமை சரியாகி, அனைத்து திரையரங்குகளும் முழு திறனுடன் செயல்படத் திறந்தால், படத்தை 18 மார்ச் 2022 அன்று வெளியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். இல்லையெனில், RRR திரைப்படம் 28 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்படும்” என்று படக்குழு சமூக வலைதளங்களில் கூறியுள்ளனர்.