பட்டையை கிளப்பும் ருடுராஜ் கெய்க்வாட்..?

*ருடுராஜ் கெய்க்வாட்*

பிரித்திவிராஜ் கெய்க்வாட் என்னும் ருடுராஜ் கெய்க்வாட். கடந்த 2 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தனது சிறப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2021 ஐபிஎல் கோப்பையை வென்றதற்கு முக்கிய பங்கு இவருக்கும் உண்டு.

அதன்பிறகு தற்போது இவர் சையது முஸ்தபா அலி டிராபியில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார் அந்த அணிக்கு கேப்டனாக தேர்வாகினர்.

அதிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விளையாடிய 4 மேட்சுகளில் 3 அரை சதம் விளாசியுள்ளார். தற்போது 5 மேட்சுகள் முடிந்த நிலையில் முத்துராஜ் கெய்க்வாட் டாப் 10 அதிக ரன் அடித்த அவர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். முதலிடத்திற்கு இன்னும் சில ரன்களே தேவை.

இவர் விளையாடிய 5 மேட்சுகளில் சுமார் 259 ரன்கள் விளாசியுள்ளார் இவருடைய ஐஎஸ்ட் ஸ்கோர் 81 அவரேஜ் 51 மேல். இவர் அடித்த 259 ரன்கள் வெறும் 173 பந்துகளில் விளாசியுள்ளார் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 150க்கு மேல். 32 போர்கள் 7 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதிக போர்கள் அடித்த பட்டியலில் இவருக்கே முதலிடம். தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவதால் அனைவரும் இவரைப் பாராட்டி வருகின்றனர். இதனால் இவருக்கு இந்திய அணியில் ஏண்டி விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வருகிற நவம்பர் 17ஆம் தேதி நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு பயணம் செய்து இந்திய அணியுடன் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டி20 போட்டிகளில் இந்திய அணியில் ருடுராஜ் கெய்க்வாட் விளையாடுவதற்காக தேர்வாகியுள்ளார்.

பலபேர் இவர் இந்திய அணியின் மிக முக்கியமான பேட்ஸ்மேன் ஆவார் என்று கூறி வருகின்றனர். இவர் மட்டுமில்லாமல் கொல்கத்தா அணியை சேர்ந்த வெங்கடேஷ் ஐயரும் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். வரும் 2022 ஐபிஎல் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருடுராஜ் கெய்க்வாடை தக்க வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.