உலகத்தில் டாப் 3 விளையாட்டு வீரர்களில் சச்சின் தேர்வு..!

*சச்சின் தேர்வு*

2021 ஆம் ஆண்டு உலகின் மிகவும் போற்றப்படும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளார். கால்பந்து ஜாம்பவான்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

இணையம் சார்ந்த சந்தை ஆராய்ச்சி மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனமான YouGov நடத்திய ஆய்வின்படி உலகின் 12 “மிகவும் போற்றப்படும் மனிதர்கள்” பட்டியலில் சச்சின் ரொனால்டோவுக்கு அடுத்ததாக பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

தற்போதைய இந்திய கிரிக்கெட் டெஸ்ட் டீம் கேப்டன் விராட் கோலியை விட இப்பட்டியலில் முன்னணியில் உள்ளார். பாரத ரத்னா விருது பெற்றவர் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், ஷாருக்கான் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரை விடவும் மேலே உள்ளார்.

உலகின் மிகவும் போற்றப்படும் ஆண்கள் 2021 பட்டியல்:

1.பராக் ஒபாம

2.பில்கேட்ஸ்

3.ஜி ஜின்பிங்

4.கிறிஸ்டியானோ ரொனால்டோ

5.ஜாக்கி சான்

6.எலோன் மஸ்க்

7.லியோனல் மெஸ்ஸி

8.நரேந்திர மோடி

9.விளாடிமிர் புடின்

10.ஜாக் மா

11.வாரன் பஃபெட்

12.சச்சின் டெண்டுல்கர்

13.டொனால்ட் டிரம்ப்

14.ஷாருக்கான்

15.அமிதாப் பச்சன்

16.போப் பிரான்சிஸ்

17.இம்ரான்கான்

18.விராட் கோலி

19.ஆண்டி லாவ்

20.ஜோ பிடன்