சமந்தாவின் அடுத்த பான் இந்தியா திரைப்படம்?

*சமந்தாவின் அடுத்தபடம்*

ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் இணைந்து இயக்கி சமந்தா நடிக்கப்போகும் பான்-இந்தியா திரைப்படம் யசோதா. இன்று படப்பிடிப்பு தொடங்கியது.

இயக்குனர்கள் ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் ஜோடியாக சமந்தா நடிக்கும் அடுத்த பான்-இந்தியா திரைப்படத்திற்கு யசோதா என்று பெயரிட்டுள்ளனர். படத்தின் டைட்டிலுடன் படப்பிடிப்பும் இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் கான்செப்ட் டைட்டிலில் இருந்து அதிகம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் யசோதா ஒரு திரில்லர் மற்றும் பெண்ணை மையமாகக் கொண்டதாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றன. முன்னதாக இருமொழி படம் என்று அறிவிக்கப்பட்டது ஆனால் இப்போது அது பன்மொழி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

யசோதா திரைப்படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு மணிசர்மா இசை அமைக்க, எம் சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். 2022 மார்ச் மாதத்திற்குள் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment