2022-யில் உங்கள் பணத்தை சேமிக்க சிறப்பான 10 வழிகள் இதோ.! save money synonym !

save money synonym

எந்த ஒரு காலத்திலும் சேமிப்பு என்பது ஒரு சிறந்த குறிக்கோள் ஆகும் என்பதில் நமக்கு எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். ஏனெனில் சேமிப்பு என்பது அவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு வார்த்தை என்று கூறலாம். சேமிப்பதனால் என்ன என்ன பயன் ? சேமிப்பதற்கான வழிகள் அனைத்தும் கீழே விரிவாக பார்ப்போம்.

சேமிப்பு (Savings ) :-

சேமிப்பு என்பது நாம் அனைவரும் ஒரு முறையாவது செய்து இருக்கும் ஒரு செயல் என்று கூறலாம். அதாவது நீங்கள் இப்போது செய்யவில்லை என்றாலும்கூட நீங்கள் சிறிய வயதில் இருக்கும் சமயத்தில் நிச்சயமாக இந்த சேமிப்பை செய்து இருக்க முடியும் என்று நம்புகிறேன்.

சேமிப்பு என்பது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பணத்தை திரட்டி ஒரு இடத்தில் வைப்பது ஆகும். அதாவது வங்கியில் வைப்பது அல்லது உங்கள் வீட்டில் வைப்பது போன்றவை இதில் அடங்கும்.

சேமிப்பை பற்றிய எனக்கு மிகவும் பிடித்த கருத்து என்பது ” நீங்கள் செலவு செய்யாத ஒவ்வொரு ரூபாயும் அது சேமிப்புதான் ” என்ற கருத்தை நான் இங்கு முன்வைக்கிறேன். இதில் கூறியது உண்மை தான்.

அதாவது நம்மிடம் பணம் இருந்தும் நாம் எந்த ஒரு பொருளை வாங்கவும் அந்த பணத்தை செலவிடவில்லை என்றால் அதுதானே சேமிப்பு. இந்த கருத்து அதைத்தான் சுருக்கமாக கூறுகிறது.

Read More :- LIC-க்கு ஒரே ஒரு நாளில் மட்டும் 2500 கோடி எப்படி.!! lic share price !!

சேமிப்பு என்பது எல்லாக்காலத்திலும் பயன்படும் ஒரு செயல் மேலும் இது நிச்சயமாக பயன்படும் ஒரு செயல் என்று கூறலாம். எனவே மேலே சேமிப்பின் பயன்கள் என்னென்ன என்பதை நாம் இந்த பதிவில் சற்று விரிவாக பார்ப்போம். அத்துடன் கூடவே சேமித்து வைப்பதற்கான 10 எளிய வழிகளையும் விரிவாக பார்ப்போம். முழுவதுமாக தெரிந்து கொள்ள முழுவதுமாக படியுங்கள். நிச்சயமாக உங்களுக்கு இந்த பதிவு தகவல்களை தரும்.

சேமிப்பின் நண்மை :-

நான் முதலில் கூறியது போல சேமிப்பு என்பது எல்லாக்காலத்திலும் பயன்படும் ஒரு செயல் என்று கூறலாம். அதாவது நீங்கள் உங்கள் வரும் காலத்தில் பணத்தை செலவு செய்ய சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும்.

24/7 உங்களிடம் பணம் :-

நீங்கள் ஒரு வேளை சேமித்து வைக்கிறீர்கள் என்றால் உங்களிடம் 24 மணி நேரமும் வார்த்தில் ஏழு நாட்களுக்கும் பணம் இருந்து கொண்டே தான் இருக்கும். அதாவது நீங்கள் அந்த பணத்தை செலவு செய்யாத வரையில் உங்களிடம் அந்த பணம் நீச்சயமாக இருந்து கொண்டே தான் இருக்கும் என்று கூறலாம்.

மற்றவரின் உதவி வேணாம் :-

நீங்கள் ஒரு வேலை பணத்தை சேமித்து வைத்து உள்ளீர்கள் என்றால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து உதவி தேவைப்படும் ஆனால் பணம் சார்ந்த உதவி நிச்சயமாக தேவைப்படாது என்று கூறலாம். நீங்கள் மற்றவரை நாடி இருக்க வேண்டிய அவசியம் இல்லை ஏற்படவும் செய்யாது என்று கூறலாம்.

கடன் வாங்க வேண்டாம் :-

அடுத்ததாக நீங்கள் ஒரு வேளை ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை சேமித்து வைக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக நீங்கள் அடுத்தவர்களிடம் கடண் என்னும் ஒன்றை வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும் கடண் வாங்கி செலவு செய்யவேண்டியவற்றை உங்கள் சேமிப்பு செலவு செய்யும்.

வட்டி கட்ட வேண்டாம் :-

நீங்கள் ஒரு நபரிடம் இருந்து கடண் வாங்கவில்லை என்றால் நீங்கள் அவருக்கு எந்தவிதமான வட்டியும் செலுத்த தேவை இல்லை மேலும் அவசியமும் இல்லை என்று கூறலாம். மாறாக உங்களுடைய சேமிப்பு அதனை ஈடு செய்யும் விதத்தில் இருக்கும். ‌

அவசர காலத்திற்கு உதவி :-

சேமிப்பு என்பது அவசர காலங்களில் உதவி செய்யும் விதத்தில் இருக்கும் என்று கூறலாம். அதாவது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தேவைப்படும் சமயத்தில் உதவி செய்யும் விதத்தில் சேமிப்பு இருக்கும்.

உதாரணமாக :- உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ விபத்து ஏற்படும் சமயத்தில் நீங்கள் சேமித்து வைத்த அந்த தொகையானது கடன் வாங்குவதில் இருந்து உங்களை நிச்சயமாக பாதுகாக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

உதாரணமாக :- உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ ஒரு கல்லூரி அல்லது பள்ளிக்கான பணத்தை கட்ட வேண்டும் என்ற சமயத்தில் நீச்சயமாக உங்களுக்கு உங்கள் சேமிப்பு என்பது உதவும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

எப்போது சேமிப்பை செலவு செய்யலாம் :-

நீங்கள் கேட்கலாம் சேமித்து வைத்துக் கொண்டு மட்டுமே இருக்க வேண்டுமா அதை செலவு செய்ய கூடாதா ? என்று ஆனால் அப்படி எல்லாம் எதுவும் இல்லை. இப்போது நாம் செலவு செய்ய சில காரணங்களை காணலாம் ‌‌மற்றும் எவ்வளவு ரூபாய் செலவு செய்யலாம் எண்பதையும் காணலாம்.

அவசர நேரத்தில் செலவு என்பது கட்டாயம் :-

நான் முதலில் கூறியது போல சேமிப்பு என்பது அவசர நேரத்தில் பயன்படுத்த வேண்டிய ஒன்று. அது உங்களுக்கும் அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ நீங்கள் உங்கள் சேமிப்பை நிச்சயமாக அங்கு பயண்படுத்தித்தான் ஆகவேண்டும் என்று கூறலாம்.

உதாரணமாக :- உங்களுக்கு விபத்து ஏற்படும் போது என்று வைத்துக் கொள்வோம் அப்போது உங்கள் சேமிப்பை நீங்கள் நிச்சயமாக செலவு செய்துதான் ஆக வேண்டும்.

அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ அல்லது உங்கள் நெருங்கிய சொந்தத்திற்கோ விபத்து ஏற்படும் போது செலவு என்பது கட்டாயம். மேலும் அது போன்ற சமயங்களில் செலவு என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்று கூறலாம்.

மேலும் அதுபோன்ற செலவுகளை செய்வதில் எந்தவிதமான தவறும் இல்லை என்று கூறலாம். அது போன்ற செலவை ஈடு செய்யவே சேமிப்பின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்.

2022-யில் உங்கள் பணத்தை சேமிக்க சிறப்பான 10 வழிகள் இதோ.!!

வங்கியில் சேமிப்பு :-

நீங்கள் முதலில் உங்கள் பணத்தை சேமித்து வைக்க ஒரு சிறந்த இடம் என்று வங்கியை கூறலாம். மேலும் வங்கி உங்கள் வீட்டில் வைத்து இருப்பதை விடவும் பாதுகாப்பை வழங்கும்.

மேலும் உங்கள் சேமிப்பு பாதுகாப்பாக இருக்கும் என்பதை நீங்கள் உணரமுடியும். அத்துடன் உங்கள் சேமிப்பு பற்றிய கவலையின்றி நீங்கள் அடுத்து வேலைளை செய்ய முடியும் என்று கூறலாம்.

மேலும் நீங்கள் வங்கியில் சேமித்து வைப்பதன் காரணமாக உங்களுக்கு அதற்கான வட்டி கிடைக்கும் என்று கூறலாம். அதாவது நீங்கள் 1,00,000 ரூபாயை வங்கியில் சேமித்து வைத்தால் அதற்கு என்று வருடம் குறிப்பிட்ட அளவு வட்டியை தருவார்கள் என்று கூறலாம்.

அதாவது ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு வட்டி வகிதத்தை பின்பற்றுவார்கள். மேலும் பெரும்பாலான வங்கிகள் 5%-7% வண்டிகளை வருடத்திற்கு வழங்குவார்கள் என்று கூறலாம்.

இதனால் உங்களுடைய சேமிப்பு என்பது இன்னும் பெருகும். உதாரணமாக நீங்கள் 1,00,000 உங்கள் வங்கியில் ஒரு வருடத்திற்கு சேமித்து வைக்கிறீர்கள் என்றால் அதற்கு 5% வட்டி என்றால் உங்களுக்கு 1,05,000ரூபாய் கிடைக்கும். இதில் உங்களுக்கு 5,000 ரூபாய் என்பது வரவு ஆகும். இதுவும் நீங்கள் சேமித்த தொகையில் இருந்து கிடைக்கும் வரவு ஆகும்.

எனவே நீங்கள் வங்கியில் சேமித்து வைப்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். மேலும் இதற்கு FIXED DEPOSIT எனப்படும். மேலும் நீங்கள் இதை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம்.

தங்கத்தில் முதலீடு :-

பொருளாதார நிபுணர்களின் கருத்தின்படி நீங்கள் நீங்கள் ஒரு மாதத்திற்கு 2000 ரூபாய் என்று தங்கத்தின் மீது முதலீடு செய்வது சிறந்தது என்று கூறுகிறார்கள்.

மேலும் இது வரும் காலத்தில் உங்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நீங்கள் இந்த முறையை கூட முயற்சி செய்து பார்க்கலாம்.

கடன் வேண்டாம் :-

அடுத்ததாக மிக முக்கியமான ஒன்று என்று இதைக் கூறலாம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு எந்தக் கடனையும் வாங்குவதையும். மேலும் வாங்கிய கடன்களை வைத்திருக்கவும் வேண்டாம்.

இன்னும் சொல்லப் போனால் கடன் இல்லாமல் இருப்பதே ஒரு சேமிப்பு தான் என்று கூறுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள். மேலும் நீங்கள் கடன் வாங்குவதை முற்றிலுமாக தவிர்ப்பது சிறந்தது.

வீட்டை தூய்மைப்படுத்துதல் :-

நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு வருடத்திற்கு ஒருமுறையாவது தூய்மைப்படுத்த வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யும் போது உங்களுக்கு தெரியவரும் அதாவது எவ்வளவு பொருட்கள் வீணாக இருக்கிறது என்பது தெரியவரும்.

மேலும் அடுத்த முறை நீங்கள் பொருட்களை வாங்கும்போது சிந்தித்து வாங்க கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
எனவே நீங்கள் வீட்டில் ஒரு வருடத்திற்கு ஒருமுறையாவது தூய்மைப் படுத்துவதால் இது பற்றி அறிந்துகொள்ள முடியும் எனலாம்.

காப்பீடு (இன்சுரன்ஸ்) :-

நிச்சயமாக நீங்கள் இன்ஷூரன்ஸில் முதலீடு செய்ய வேண்டும். நிச்சயமாக இன்சூரன்ஸ் என்பது ஒரு சேமிப்பு ஆகும். நீங்கள் சேமித்து வைப்பதற்கான சிறந்த வழி என்றும் இன்சூரன்ஸ் கூறலாம்.

இன்சூரன்ஸ் வழியாக நீங்கள் எந்த விதமான இன்சூரன்ஸ் செய்து இருக்கிறார்களோ அது முறையாக நமக்கு விபத்து ஏற்படும்பொழுது நமக்கு தேவையான பணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனம் திருப்பித் தருகிறது.

Inex Funds-இல் பணம் சேமிப்பு :-

அடுத்ததாக உங்களுக்கு ஸ்டாக் மார்க்கெட்டிங் பற்றி தெரியவில்லை என்றாலும் கூட நீங்கள் இதை செய்து தான் ஆக வேண்டும். மேலும் பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி ஸ்டாக் மார்க்கெட்டில் ஏறுகிறதோ அது இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை இன்டெக்ஸ் ஃபண்டில் சேமித்து வைப்பது என்பது ஒரு சிறந்த சேமிப்பு வழியாக இருக்கும் என்று கூறுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

சேமிப்பு மற்றும் செலவு Spending & Earning :-

அடுத்ததாக பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி இது நீங்கள் பின்பற்ற வேண்டும். நீங்களும் உங்கள் மனைவியும் வேலைக்கு செல்வது என்பதில் எந்தவிதமான தவறும் இல்லை.

அவ்வாறு இரண்டு நபர்களின் மூலம் வரும் வருமானத்தை ஒரு நபரின் வருமானத்தில் செலவிடவும் இன்னொரு நபரின் வருமானத்தில் சேமிக்கவும் பயன்படுத்துங்கள்.

உங்களுடைய பட்ஜெட்டை திட்டமிடுங்கள் :-

படம் ஆரம்பிப்பதற்கு முன் பதிலில் இருந்தே இந்த வருடத்திற்கான பட்ஜெட்டை நீங்கள் திட்டமிடுவது என்பது சிறந்த வழியாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் துவாரகை பட்ஜெட்டை திட்டமிட்டு அதன் வழியாக நடப்பது என்பது கடினமான ஒன்றாக இருந்தாலும் அதை செய்வது வழியாக பெரிய அளவில் பணத்தை நம்மால் சேமிக்க வைக்க முடியும் என்று கூறுகிறார்கள்.

செலவுகளை கானுங்கள் :-

அதாவது கடந்த 6 மாதம் அல்லது கடந்த ஒரு வருடம் நீங்கள் செய்த செலவை திரும்ப பாருங்கள். அதாவது இது தேவையான அளவு மட்டுமே தேவையில்லாத செலவு என்பது தெரிந்து கொள்ளுங்கள்.

அவ்வாறாக தேவையில்லாத செலவை நீங்கள் தவிர்ப்பது சிறந்தது. மேலும் தேவையில்லாத செலவுகளை நீங்கள் செய்யும் பட்ஜெட் பிளானில் இருந்து விளக்குவதும் சரியானதாக இருக்கும்.

No Spending Week திட்டம் :-

நீங்கள் ஒரு மாதத்திற்கு அதில் இரண்டு வாரத்திற்கு எந்த ரூபாயும் செலவு செய்ய வேண்டாம். அதாவது வெட்டியாக செலவு செய்வதை தவிருங்கள் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

நீங்கள் ஒரு மாதத்தில் இரண்டு வாரம் செலவு செய்ய வேண்டாம் என்று நிறுத்தினால் வருடத்திற்கு எட்டு வாரம் அதாவது நீங்கள் 2 மாதம் எந்தவித செலவும் செய்யவில்லை அதனால் 2 மாதத்திற்கான சேமிப்பு என்பது அதிகமாகும்.

எனவே நீங்கள் இதை முயற்சி செய்யலாம். மேலும் இந்த 10 திட்டங்களும் உங்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இதைப் பயன்படுத்தி 2022ல் சிறிது சிறிதாக சேமிக்க தொடங்கலாம்.

2022-யில் உங்கள் பணத்தை சேமிக்க சிறப்பான 10 வழிகள் இதோ.! save money synonym !