25 கோடி லஞ்சமாக குடுத்த ஷாருக்கான்..!

சிறிது நாட்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகர் சாருக்கான் மகன் ஆரியன்கான் மும்பை சொகுசு கப்பலில் நடந்த விருந்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக கூறி கைது செய்யப்பட்டார்.
NCB எனப்படும் போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன்கானை வெளியே எடுப்பதற்காக சாருக்கான் தரப்பில் இருந்து 25 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

இந்த தகவலை ஆரியன் கான் கைது செய்யப்பட்ட வழக்கில் கோசாவி என்பவரும் அவரது உதவியாளர் பிரபாகரன் செயல் என்பவரும் தனிப்பட்ட சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து உதவியாளர் பிரபாகரன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஷாருக்கான் மகன் ஆரியன் கானை விடுவிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பத்துக்கும் மேற்பட்ட வெறும் காகிதங்களில் கையெழுத்து வாங்கியதாகவும் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட அன்று தனிப்பட்ட சாட்சியம் ஆன கோசாவியுடன் இணைந்து பிரபாகரன் சென்றுள்ளார். டிசோசா என்பவரை கோசாவி சந்தித்ததாகவும் கூறியுள்ளார். அப்போது 25 கோடி பேரம் பேசி 18 கோடி ரூபாய்க்கு முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதில் எட்டு கோடி ரூபாய் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே க்கு வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மறுத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக் இந்த செய்தியில் உண்மை இல்லை என கூறியுள்ளார். பலரும் குழம்பி வரும் நிலையில், இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார்.