சில்க் ஸ்மிதா க்ரைம் கதை..?

*சில்க் ஸ்மிதா*

தமிழ் சினிமாக்கள்ள பலரோட மரணத்துக்கு இன்னும் விடைகிடைக்காம புரியாத புதிராவேதான் இருக்கு…சினிமா நடிகர்/நடிகைகள் தற்கொலைங்குற சம்பவம் ஆரம்ப காலத்துல இருந்து ஒரு ஹாட் டாபிக்கா தான் இருக்கு…. அப்டி தற்கொலை செஞ்சு இறந்துபோன பல நடிகர்,நடிகைகள யோசிச்சா நமக்கு முன்னாடி வந்து நிக்கிற அந்த ஒரு பேர் “சில்க் ஸ்மிதா“,இன்னைக்கு சில்க் ஸ்மிதா தற்கொலைக்கு பின்னாடி இருக்குற மர்மங்களை பத்திதான் பாக்க போறோம்….

ஆந்திரா மாநிலத்துல ஒரு சின்ன கிராமத்துல ஒரு ஏழ்மையான குடும்பத்துல பிறந்த பொண்ணு விஜயலட்சுமி, அந்த விஜயலட்சுமிக்கு கூட பிறந்த தம்பியும் ஒருத்தன் இருந்தான்,அந்த தம்பி பிறந்த கொஞ்ச நாள்லயே அவுங்க அப்பா வேற ஒரு பொண்ணோட போயிடுறாரு, அதுக்கு அப்புறம் வருமைல வாடுற அந்த குடும்பம் வயல் வேலை,வீட்டுவேலை செஞ்சு காலத்த நகத்திக்கிட்டு இருக்காங்க,படிப்பும் 5வதுலே நிறுத்தப்படுது.

அந்த விஜயலட்சுமி ரொம்பவும் அழகா இருக்கத பாத்துட்டு அந்த சுத்து வட்டாரத்துல இருந்த ஆண்கள் எல்லாம் ரொம்பவும் குடைச்சல் குடுக்க ஆரம்பிக்குறாங்க,அதுனாலயே அந்த பொண்ணோட அம்மா அவளவிட வயது ரொம்பவும் அதிகமான ஒரு ஆணுக்கு திருமணம் செஞ்சி குடுத்துடுறாங்க,அந்த திருமணத்துக்கு அப்புறமும் அந்த பொண்ணோட வாழ்க்கை துயரமாவேதான் போயிட்டு இருந்திருக்கு.அந்த பொண்ணோட கணவர், மாமியார்னு எல்லாரும் சேர்ந்து கொடுமைபடுத்த அந்த விஜயலட்சுமி மறுபடியும் வீட்டுக்கே திரும்பி வந்திடுறா.

அந்த விஜயலட்சுமிக்கு சினிமாவுல நடிக்கனும்னு அதிக ஆர்வமா இருந்துச்சு,அதே சமயத்துல அவளுக்கு தெரிஞ்ச அண்ணபூரணிங்குற தோழியோட recommendationல சினிமா நடிகைகளுக்கு உதவியாளர் வேலை அந்த விஜயலெட்சுமிக்கு கிடைக்குது,அப்போ சென்னை வந்து நடிகைகளுக்கு TouchUp,helping மாதிரியான உதவிகள் செய்யுற வேலை பாத்திட்டு வந்திருக்கறா அந்த விஜயலெட்சுமி.

பலமாதம் அந்த வேலையே செஞ்சிட்டு இருந்த விஜயலெட்சுமிக்ககு திருப்பதிராஜன் ங்குற ஒரு டைரக்டர் மூலமா ஒரு பட வாய்ப்பு கிடைக்குது,அந்த டைரக்டர்தான் அந்த விஜயலெட்சுமியா “ஸ்மிதா”வா மாத்துறாரு… அதுக்கு அப்புறம் ஒருநாள் நடிகர் விணுசக்கிரவர்த்தி சுமிதாவோட அழகபாத்து ஒரு கல்லுக்கடையில வருற ஐடம்சாங்க்கு மட்டும் வந்து நடனமாடுற ஒரு பாத்திரத்த தருறாரு, அந்த பாடலும் பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடிச்சதும் “சில்க் ஸ்மிதா”க்கு ஒரு face recognitionகிடைக்குது,அதுக்கு அப்புறம் நம்ம எப்டியும் நல்ல நடிகையாகிடலாம்னு நினைப்புல இருந்த சில்க் கு மறுபடியும் அந்த “ ஒரு பாடல்” வாய்ப்பு மட்டுமே திரும்ப திரும்ப வருது…

நடிகர்,நடிகை,இயக்குனர்,இசையமைப்பாளர் னு பாத்து படத்துக்கு போன கூட்டம் “சில்க் ஸ்மிதா” ஓட அந்த ஒரு பாடலுக்கு மட்டும் போகுற நிலைமைக்கு மாறுனுச்சு… தமிழ்,தெலுங்கு,மலையாளம் னு எல்லா மொழி படங்கள்லயும் வாய்பபு கிடைக்குது,அந்த காலத்துல நடிகைகளுக்கு நிகரா “சில்க் ஸ்மிதா” க்கும் சம்பளம் குடுக்கப்பட்டதாவும் சொல்லுறாங்க….

அந்த நேரத்துல தான் பாரதிராஜாவோட கண்கள்ல சில்க்ஸ்மிதா பட ஆரம்பிக்கிறாங்க,சொல்லப்போனா அவுங்களோட “கண்” பார்க்கபடவச்சிச்சு,அதுக்கு அப்புறம் அவரோட “அலைகள் ஒய்வதில்லை” படத்துல “எஸ்தர்” ங்குற கேரக்டர்ல ரொம்பவும் பிரமாதமாவே நடிக்கிறாங்க,அதுக்கப்புறமாச்சும் நம்ம ஒரு நடிகையாகிடலாம்குற என்னத்துல இருந்த சில்க்ஸ்மிதாட்ட எல்லா ப்ரொடியுசரும் கேட்டது அந்த ஒரு “பாடல்” மட்டும்தான்… அதுக்கு அப்புறம் அவங்க நடிச்ச “மூன்றாம் பிறை” படம் அவங்கள பாலிவுட்டுக்கும் கொண்டு போகுது…

அந்த நேரத்துல சில்க்ஸ்மிதா யார்ட்டயும் அதிகமா பேசக்கூட மாட்டாங்களாம்,யாரோடவும் பழகுறதும் இல்ல,ஒரு பேட்டில “ஏன் இப்படி இருக்கீங்க“னு கேட்டதுக்கு “இங்க எல்லா ஆண்களுக்கும் என்னோட உடல் மேலதான் ஆசை,நான் யார்கூடயாச்சும் பழக ஆரம்பிச்சாலே அவுங்க அந்த இடத்துக்குதான் வருறாங்க அதுனால தான் நான் எப்போதும்.

கோவபாவனையாவே இருக்கேன்”னு சொல்றாங்க, இப்படி சொல்ற சில்க் ஸ்மிதா தன்னோட உதவியாளர்களுக்கு பண உதவில இருந்து சில நிகழ்வுகளுக்குலாம் சமைச்சு குடுக்குற வரையும் உதவியா இருந்திருக்காங்க,அது மட்டுமில்லாம தன்னோட சொந்த கிராமத்துக்கும் பல அதியாவசிய உதவிகள செஞ்சும் குடுத்திருக்காங்க…

அதுக்கப்புறம் அதிகமா படவாய்ப்பு வந்தாலும் ஒரு கட்டத்துல நம்ம நினைச்சு வந்தது வேற,நம்ம இப்ப பண்ணிட்டு இருக்கது வேறனு புரிஞ்சு கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிக்குறாங். தனிவாழ்க்கையில கவனம் செலுத்த ஆரம்பிச்ச அவங்களுக்கு ஆந்திரால தாடிக்காரர் ங்குற ஒரு டாக்டரோட தொடர்பு இருக்குறதும் வெளி உலகத்துக்கு தெரிய வருது.

பணம்,புகழ்,சொத்துனு கொஞ்ச காலம் நல்லாவே போயிட்டு இருந்த சில்க் ஸ்மிதா வயும் Depressionங்குற கொடிய நோய் விட்டு வச்சதா இல்ல,தனக்குனு பெரிய நட்பு வட்டாரம் எற்படுத்திக்கிடாத சில்க் ஸ்மிதாவுக்கு நெருங்கிய தோழினா “அனு ராதா” தான்… ஒரு நாள் இரவு அனுராதாக்கு போன் பண்ணுற சில்க்ஸ்மிதா மனசுபாரமா இருக்குனும் தன்ன வந்து பாக்க சொல்லிருக்காங்க.

அதுக்கு அணுராதாவும் நான் காலையில வருறேனு சொல்லி இருக்காங்க… அன்னைக்கு நாளும் விடியுது,காலையில எழுந்து நியூஸ்கேட்ட அணுராதாவுக்கு பெரிய அதிர்ச்சி,”அன்னைக்கு ராத்திரியே சில்க் ஸ்மிதா தூக்கி போட்டு தற்கொலை“னு வருது , நேத்து இரவே போயிருந்தா இன்னேரேம் சில்க் உயிரோட இருந்திருப்பாங்கங்குற குற்ற உணர்ச்சிய அணுராதா பல இடத்துல சொல்லிருக்காங்க…

அது ஒரு தற்கொலைதான் னு போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்ல இருந்து போலீஸ் விசாரனை வரையும் சொல்லிருந்தாலும்.அவங்க மூணு நாளைக்கு முன்னாடிதான் தன்னோட அம்மாவயும் தம்பியயும் சந்திச்சிருக்காங்க,அவங்களுக்கு எழுத படிக்க தெரியாததால அவுங்க சொத்தை அபகரிச்சுக்க யாரோ கொலை பண்ணிட்டதா அவுங்க அம்மா வழக்கு போட்டுருந்தாங்க , சில்க்ஸ்மிதா இறந்த கொஞ்ச நாள்லயே அவரோட உதவியாளர் ஒருத்தரும் அதே மாதிரி தூக்குப்போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டதும் அந்த வழக்ககுல அதிகமான சந்தேகத்த எழுப்புச்சு,இன்னைக்கும் மர்மமாவேதான் இருக்கு விஜயலட்சுமி க்கு என்னதான் உண்மையா நடந்துச்சுனு…!!