பார்ட்டியில் பஞ்சாயத்து ஆனதால் சிம்பு எஸ்கேப்

*சிம்பு எஸ்கேப்*

சில மாதத்திற்கு முன் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வெளியாகிய படம் மாநாடு. இப்படத்தில் சிம்பு, எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி, எஸ் ஏ சந்திரசேகர் போன்ற பலர் இதில் நடித்துள்ளனர். இப்படம் திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்திலிருந்து சிம்புவிற்கும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் ஒத்துப்போகவில்லை சில பிரச்சனைகள் இருவருக்குள் இருந்தது. அதன்பிறகு ஓரளவு சமாதானம் ஆகி படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. இப்படத்தின் வெளியீட்டு தேதி கிட்டத்தட்ட மூன்று நான்கு தடவை தள்ளிப்போனது.

படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியீடு இருந்தது ஆனால் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நவம்பர் 24ஆம் தேதி படம் வெளியாகாது என்று அறிவித்தார். ஆனால் எப்படியோ ஒரு போராட்டத்திற்கு பிறகு நவம்பர் 25ஆம் தேதி மாநாடு திரைப்படம் திரையில் வெளியானது.

சமீபத்தில் சென்னையில் மாநாடு திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் படத்தின் கதாநாயகன் சிம்பு கலந்து கொள்ளவில்லை. இது எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் அந்த விழாவில் பேசிய எஸ் ஏ சந்திரசேகர் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தயாரிப்பாளர்களை மதிக்க வேண்டும் என்று சிம்புவை தாக்கிப் பேசி இருந்தார்.

நடிகர் சிம்பு வெற்றி விழாவில் கலந்து கொள்ளாதது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் நடிகர் சிம்பு க்கும் இடையே உள்ள மனக்கசப்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே ஏதோ ஒரு பிரச்சினை இருந்து கொண்டு தான் இருக்கிறது விரைவில் அதைப் பற்றிய தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.