தனுஷ் விவாகரத்தில் சிம்புக்கு பங்கு உண்டு

*தனுஷ் விவாகரத்தில் சிம்புக்கு பங்கு*

நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா விவகாரத்திற்கு காரணமே ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா நடிகர் சிம்புவிற்கு வாழ்த்து கூறி டிவிட் செய்தது தான் என்று கூறப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் நடிகர் சிம்புவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இதற்கு பலர் பாராட்டுகள் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிம்புவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தற்போது சௌந்தர்யா வாழ்த்து கூறியதுதான் ரஜினி வீட்டில் வீசிய புயலுக்கு காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர். ஏனெனில் நடிகர் சிம்புவும் தனுஷும் திரையுலகில் போட்டியாளர்களாக இருந்து வருகின்றன. இதனால் சௌந்தர்யாவின் வாழ்த்து நடிகர் தனுஷை வெறுப்படையச் செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இது வெறும் வதந்தி என்றும், சிம்புவுக்கும் தனுஷ் ஐஸ்வர்யாவின் விவாகரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரிதாகி வருவதால் நடிகர் தனுஷ் விரைவில் இது குறித்து விளக்கம் தருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.